காவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி
Recommended Video
மதுரை: மதுரையில் வாகன சோதனையில் போலீசார் லத்தியால் தாக்கியதில் இளைஞர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவலர்களின் இரக்கமற்ற செயலால் தற்போது அந்த குடும்பமே உருகுலைந்து போய் உள்ளது..
மதுரை சிம்மக்கல் அருகே கீழ் பாலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு அப்பகுதியில் டெல்டா பிரிவு காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தகுமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாகனத்தில் சென்றபோது சோதனைக்காக நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இதனால் திடிரென காவலர்கள் லத்தியால் தாக்கியதில் பின்னால் அமர்ந்து சென்ற விவேகானந்தகுமார் படுகாயம் அடைந்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்றைய தினம் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் உறவினர்களின் தொடர் பேராட்டம் நடத்தினர். தாக்குதல் சம்பவத்தின் போது பணியில் இருந்த 6 காவலர்களின் பெயரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார் அறிவித்த நிலையில் இரவு உடற்கூராய்வு நடைபெற்றது.
இதனையடுத்து இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான போலிசார் மீது கொலை வழக்குபதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்கபோவதாக உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்த விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா (25) வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை முயன்றார்.உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
போலிசார் தாக்குதலில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து மீள முடியாத நிலையில் தற்போது விவேகானந்தகுமாரின் மனைவியும் தற்கொலை முயற்சி செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவேகானந்தகுமார் - கஜப்பிரியா இவர்களுக்கு சாய்சரன் என்ற ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விவேகானந்தகுமார் உடல் வாங்கப்படாத நிலையில் அடுத்தடுத்த நிகழ்வால் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications