223,000 விவசாயிகளுக்கு வேளாண் மின் இணைப்பு தவெக ஆட்சியில் விடிவு காலம் பிறக்குமா? உதயகுமார் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 223,000 விவசாயிகளுக்கு இந்த த.வெ.க அரசின் வருகிற பட்ஜெட்டில் விடிவு காலம் பிறக்குமா? காத்திருப்போர் அனைவருக்கும் வேளாண் மின் இணைப்புகள் உடனே கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எகிறிக்கொண்டே போகிறது. தட்கல் திட்டத்தில் 6 மாத காலத்திற்குள் மின் இணைப்பு வழங்கும் என்ற அறிவிப்பை நம்பி, மின் இணைப்பு பெற ,திரும்பப் பெற முடியாத முன் வைப்புத் தொகையாக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலுத்தி, கடந்த காலங்களிலே காத்திருப்போரின் எண்ணிக்கை 30,000க்கு மேல் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் பேசுகையில், "நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

Will 223 000 farmers receive agricultural electricity connections rb Udhayakumar asks

வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் இரண்டு லட்சத்து 23,000 விவசாயிகளுக்கு இந்த த.வெ.க அரசின் வருகிற பட்ஜெட்டில் விடிவுகாலம் பிறக்குமா? காத்திருப்போர் அனைவருக்கும் வேளாண் மின் இணைப்புகள் உடனே கொடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எகிறிக்கொண்டே போகிறது. தட்கல் திட்டத்தில் 6 மாத காலத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நம்பி, மின் இணைப்பு பெறத் திரும்பப்பெற முடியாத முன்வைப்புத் தொகையாக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலுத்தி, கடந்த காலங்களிலே காத்திருப்போரின் எண்ணிக்கை 30,000-க்கு மேல் உள்ளது.

சராசரியாகத் தலா 3 லட்சம் என வைத்துக்கொண்டாலும் கூட, சுமார் 900 கோடிக்கு மேல் விவசாயிகளின் பணம் அரசிடம் இன்றைக்கு வைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'மின்சாரத் துறையில் 36,000 கோடி ஊழல் கடந்த ஆட்சியில் நடந்திருக்கிறது' என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டவர்கள், இந்த 900 கோடி குறித்து, மின் இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

த.வெ.க அரசு தாக்கல் செய்யும் இந்த வேளாண் பட்ஜெட்டில் மின் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவருமா? ஏற்கனவே தொடர் மின்வெட்டு, மின்வாரிய தலைமையகத்திலே ஹார்ட் டிஸ்க் திருட்டு என கடந்த 3 மாதங்களிலே மின்சாரத் துறையில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாத இந்த மின்கட்டணத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40% முதல் 60% வரை மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகத் தற்போது தமிழகம் தழுவிய போராட்டம் நடக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் இன்னும் முழுமையாக மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய திட்டமாகச் செயல்படுத்தப்படவில்லை.

இதற்கு இடையிலே, 'கர்நாடகாவுக்குத் தமிழக முதல்வர் விஜய் வரவேண்டாம்' எனக் கர்நாடகா முதல்வர் இன்றைக்குக் கோரிக்கையாக, வேண்டுகோளாக வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காவேரி தொடர்பான பேச்சுக்கு இன்றைக்கு முட்டுக்கட்டை விழுந்ததாக விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். தண்ணீரின்றி கண்ணீரிலே தவிக்கிறது டெல்டா மாவட்டம். இதைக் கையாள வேண்டிய அணுகுமுறையைச் சரியான முறையில் முதல்வர் விஜய் கையாளவில்லையோ என்கிற வருத்தமும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஆணையத்திற்குத்தான் அதிகாரம் இருக்கிறது. 'ஆணையம் செயல்படுவதற்குப் பாரதப் பிரதமரிடம் முறையிடலாம்' என்று எடப்பாடியார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் 'அனைத்துக் கூட்டத்தைக் கூட்டுங்கள்' என்று சொன்னபோதும் கூட, அதைக்காதில் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது தான்தோன்றித்தனம் என்று சொல்லலாமா?

தமிழக விவசாயிகளின் கருத்துகளையும், விவசாயச் சங்கங்களுடைய கருத்துகளையும் கேட்காமல் போனதால் இப்போது என்ன ஆனது? முறையான பாதையில் சென்றால்தான் ஊர் சென்று சேர முடியும் என்பதைப் போல, இன்றைக்கு ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை நம்மால் பெற முடியவில்லை. ஆணையம் உத்தரவிட்டு நீர் ஒழுங்காற்றுக் குழு கொடுத்த தீர்ப்பை வலியுறுத்தி, 3,500 டி.எம்.சி கனஅடித் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகும் கூட, 'கர்நாடகா நாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்வோம்' என்று சொல்லுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையிலே இந்த இரு மாநில உறவுகளுக்கான பிரச்சினை, தண்ணீரைப் பகிர்ந்துகொள்கிற பிரச்சினை, காலம் காலமாக இருக்கிற இந்தப் பிரச்சினைக்கு ஓர் அறிவு சார்ந்த அணுகுமுறையை, சட்டரீதியான அணுகுமுறையை விட்டுவிட்டு, ஓர் அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறையைக் கையில் எடுத்த தமிழக அரசு இப்போது முட்டி குனிந்திருக்கிறதோ என்றுதான் நமக்குக் கவலை ஏற்பட்டிருக்கிறது.

இதே போன்ற அணுகுமுறைகளை அவர்கள் கையாண்டால், 'தமிழகத்தின் தன்மானம் காற்றிலே பறக்கும்' என்ற சூழ்நிலைதான் வந்திருக்கிறது. முதல்வர் விஜய் அவர்களே, இன்றைக்கு உங்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியான வழிகாட்டுதலைக் கொடுப்பார்கள் என்று நம்பித்தான் இந்த மக்கள் உங்களை முதலமைச்சர் அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள்.

ஆகவே, முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துவிட்டோம் என்பதற்காக யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஜனநாயகம் ஆகாது; அது சர்வாதிகாரத்தின் தொடக்கம். ஆகவே, இந்தக் காவேரி நீர் பெறுவதில் விஜய்யின் சர்வாதிகாரம் இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறதா? ஜனநாயகம் வெளிப்பட்டிருக்கிறதா? என்பதை மக்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்," இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+