நீங்கதான் தைரியமான ஆளாச்சே.. வந்து விழுந்த சீமானின் 'படார்' கேள்வி.. கூட்டணியா? கையை பிசையும் பாஜக
மதுரை: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த பாஜக மாநில தலைவர் இன்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில், அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிட தயாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாடு அரசு மீது அண்ணாமலை ஏராளமான புகார்களை முன்வைத்து வந்தார். இப்படி இருக்கையில்தான் அவர் கட்டியிருந்த 'வாட்ச்' குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த வாட்ச் வாட்ச் பல லட்சம் மதிப்புள்ளது என்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது எனவும் சொல்லப்பட்டது. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தான் ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும், தனக்கென்று சில ஆடுகள், கொஞ்சம் விவசாய நிலம் மட்டுமே இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இவருக்கு எப்படி இவ்வளவு காஸ்ட்லியான வாட்ச் கிடைத்தது என்று கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், இது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் செய்யப்பட்ட வாட்ச் என்றும் உலகம் முழுவதும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இது கிடைக்கும் எனவும் கூறினார். இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அதாவது இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை காட்ட முடியமா? என்று
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பினார்.
இதனையடுத்து அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக ஏப்ரல் 14ம் தேதி வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடுவதாக அண்ணாமலை கூறினார். மேலும் இத்துடன் திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த டிவிட்டில் "முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் படங்களுடன் வீடியோவை வெளியிட்டு, நாளை (ஏப்.14) காலை 10.15 மணிக்கு 'திமுக ஃபைல்ஸ்' வெளியிடப்படும்" என்று கூறியிருந்தார்.
அதேபோல இன்று காலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்குறிப்பிட்டவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுகவின் ஊழல் பட்டியல் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த பட்டியலை வெளியிடுவதன் மூலம் அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் கிடையாது. ஊழல் செய்தது யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் அவர்களது தகவல்களை அண்ணாமலை வெளியிடுவாறா?

அதேபோல ஊழல் அறிக்கையை வெளியிடும் அண்ணாமலை, ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொல்வாறா? அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவாகாரத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் அவர் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர்கள் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications