சான்சே இல்லையாம்! எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அருகருகே நின்ற அந்த நொடி.. "மேலிட" விருப்பம்! மனசு மாறுமா?
மதுரை: எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை விமான நிலையத்தில் ஒருவரை ஒருவர் அருகருகே சந்தித்துக்கொண்டனர்.
திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக மதுரை ஏர்போர்ட் வந்த பிரதமர் மோடியை கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
இரண்டு பேருமே தனி தனியாக மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தாலும் இரண்டு பேரும் ஒன்றாக வர வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்பி உள்ளது. இரண்டு பேரையும் தனியாக தனியாக விருப்பம் இல்லாமல், மோடி இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் வர சொல்லி இருக்கிறார்.

மோடி சந்திப்பு
இதையடுத்தே வேறு வழியின்றி, பிரதமர் மோடியை வரவேற்கவும், வழியனுப்பவும் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சென்று இருந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக மதுரை விமான நிலையில் அருகருகே நின்றனர். கடைசியாக இவர்கள் தமிழ்நாடு சட்டசபையில் தீபாவளிக்கு முன் அருகருகே பார்த்துக்கொண்டனர். அப்போது இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அதன்பின் நேற்று இரண்டு பேருமே ஒன்றாக விமான நிலையத்தில் இருந்தனர் .

ஒன்றாக சென்றனர்
இரண்டு பேருமே ஒன்றாக மோடியை வரவேற்றனர். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. முகத்திற்கு முகம் பார்த்துக்கொள்ளவில்லை. அருகருகே இருந்தும் இவர்கள் தங்களுக்கு இடையில் சுவர் இருந்தது போல பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இந்த நிகழ்வுதான் அதிமுகவில் புதிய விவாதம் ஒன்றை கிளப்பி உள்ளது. முன்பு எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் மோதிக்கொண்ட போது அவர்களை சேர்த்து வைத்தது மோடிதான்.

பேசவில்லை
இதை ஓ பன்னீர்செல்வம் பேட்டியில் கூறி இருக்கிறார். அதேபோல் இப்போது மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கத்தான் மோடி இப்படி அழைத்தாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் மோடி சொன்னதும் மோதலை மறந்துவிட்டு இரண்டு பேருமே அருகருகே நின்று இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இவர்கள் இந்த முறையும் மோதலை மறந்துவிட்டு இணைய வேண்டும். அதுதான் அதிமுகவிற்கு நல்லது என்று கட்சிக்குள் குரல் எழுந்துள்ளது.

கோரிக்கை என்ன
அதாவது இரண்டு பேருமே தனி தனியாக இருந்தால் கண்டிப்பாக கட்சி உடையும். இது அதிமுகவிற்குத்தான் சிக்கல். அவர்களின் கூட்டணியை நம்பி இருக்கும் பாஜகவிற்கும் சிக்கல். அதனால் இவர்கள் இருவரும் மனம் மாறி ஒன்றாக சேர மாட்டார்களா. ஒன்றாக கட்சியை திமுகவிற்கு எதிராக வழி நடத்த மாட்டார்களா என்று ரத்தத்தின் ரத்தங்கள் சிலர் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர். தொண்டர்கள் சிலர் ஒற்றுமையை எதிர்பார்த்தாலும் இந்த விவகாரத்திலும் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள்.

சான்ஸே இல்லை
ஓபிஎஸ்சுடன் இணைய சான்ஸே இல்லை. அவரை கட்சியில் இருந்து நீக்கிய முடிவு இறுதியானது. அதில் மாற்றமே இல்லை. இப்போது ஓபிஎஸ்ஸை அவர் வர சொன்னது எல்லாம் வெறும் மரியாதைக்காகவேதான். கோர்டில் வழக்கு நடக்கிறது என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பினரோ.. அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று மோடியே நினைக்கிறார். ஆனால் கட்சியில் உள்ள தலைவர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எல்லா தலைவர்களும் ஒன்றாக இருப்பதே கட்சிக்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications