Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மாநாடு திருப்புமுனை தருமா.. மக்கள் கருத்து என்ன தெரியுமா.. களத்திலிருந்து ஒன்இந்தியா தமிழ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு காசு கொடுத்தே ஆட்களை திரட்டுவதாகவும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. மாநாடு நடைபெறும் மதுரையில் பொதுமக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய ஒன் இந்தியா நேரடியாக களத்திற்கே சென்றது. அப்போது பொதுமக்கள் அளித்த பதிலின் விவரம் வருமாறு:-

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்ததையடுத்து தலைமை பதவியை பிடிக்க ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த ரேசில் முந்திய எடப்பாடி பழனிசாமியை கட்சியை முழுவதுமாக தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ஓ பன்னீர் செல்வம் அதிமுக பொதுக்குழு செல்லாது என தொடர்ச்சியாக சட்ட போராட்டங்கள் நடத்தினர்.

Will the AIADMK conference bring a breakthrough? what people thinks Spot report from OneIndia Tamil

இதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து விட்டது. தற்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையே மலைபோல ஓ பன்னீர் செல்வம் ஒரு பக்கம் நம்பிக் கொண்டுஇருந்தாலும் மற்றொரு பக்கம் டிடிவி தினகரனுடன் கைகோர்த்து செயல்படுவதாக அறிவித்து இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை எந்த ஒரு மாநாடும் நடைபெறவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை என்ற கருத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடத்த அக்கட்சி தலைமை முடிவு செய்தது. இதன்படி நாளை இந்த மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.

அதிமுக மாநாட்டில் சுமார் 15 லட்சம் திரள்வார்கள் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இதற்காக தமிழக முழுவதும் இருந்து அதிமுகவினர் மதுரையை நோக்கி புறப்பட்டுள்ளனர். மாநாட்டிற்கு வரும் அதிமுகவினருக்கு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. டன் கணக்கில் அரிசிகள் காய்கறிகள் என மலைபோல அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சுடச்சுட உணவு வழங்க சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டு பற்றிய பதிவுகளும் சமூக வலைத்தளங்களிலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து இருக்கிறர்கள். மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு காசு கொடுத்தே ஆட்களை திரட்டுவதாகவும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. மாநாடு நடைபெறும் மதுரையில் பொதுமக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய ஒன் இந்தியா நேரடியாக களத்திற்கே சென்றது. அப்போது பொதுமக்கள் அளித்த பதிலின் விவரம் வருமாறு:-

Will the AIADMK conference bring a breakthrough? what people thinks Spot report from OneIndia Tamil

* மதுரையில் நடக்கும் மாநாடு எடப்பாடிக்கு திருப்பு முனை மாநாடாக 100 சதவீதம் இருக்கும். எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்தை திருப்பி கூப்பிடாத வரை சுய முடிவாக இருந்தால், அவர் திரும்பவும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது....

* ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி வர சான்ஸே இல்லை..

* இந்த மாநாடு வழங்காது... ஒரே வார்த்தைதான்..

* ஓபிஎஸ் தனியாக இருக்கிறாரே.. இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் வர வாய்ப்பு உள்ளது. அவருக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்தானே...

* மாநாடு செல்லுபடியாக வாய்ப்பு இல்லை... மாநாடு பெரிய அளவில் வருவதற்கான வாய்ப்பு இல்லை...

* மாநாடு திருப்புமுனையாக இருக்க வாய்ப்பு இல்லை... இதோட அந்த கட்சி இருக்காது...

* மக்கள் தெளிவாக இருக்காங்க...அடுத்த முறை எடப்பாடி வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு...

* ஓபிஎஸ்- டிடிவி தனியாக இருக்கும் போது எடப்பாடி வர்றதுக்கு (ஆட்சிக்கு) வாய்ப்பு ரொம்ப கம்மிதான்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+