கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தை அறுத்து கொலை.. தந்தை போன் சுவிட்ச் ஆப்.. மதுரை கொடூரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தை அறுத்து கொலை..மதுரை கொடூரம்

    மதுரை: கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தந்தை போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது.

    மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் இஸ்மாயில். இவர் புதுமண்டபத்தில் தையல் கடை நடத்தி வருகிறார்.
    இவரது மகள் ரிஷ்வானா பானு (22).

    5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் ரிஷ்வானா பானு.

    தாய் மயக்கம்

    தாய் மயக்கம்

    வீட்டின் மாடியில் உள்ள அவரது அறையில் தனியாக வசித்து வந்தார் ரிஷ்வானா பானு. இந்த நிலையில் நேற்று மதியம் நீண்டநேரமாக ரிஷ்வானா பானு வெளியே வாரததால் அவரது தாய் அறையை திறந்து பார்த்துள்ளார். உள்ளே, கழுத்து அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார் ரிஷ்வானா. இதை பார்த்ததும், அலறி துடித்தார் அவரது தாய். அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார்.

    தடயவியல்

    தடயவியல்

    இதை அறிந்த பக்கத்து வீட்டினர் இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரிஷ்வானா உடலை கைப்பற்றி
    உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

    போன் சுவிட்ச் ஆப்

    போன் சுவிட்ச் ஆப்

    ஆனால், முக்கியமான ஒருவர் மட்டும் அங்கே வரவேயில்லை. அது ரிஷ்வானா தந்தை இஸ்மாயில். அவரனது போனை போலீசார் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே இஸ்மாயிலுக்கு இந்த கொலை குறித்து ஏதேனும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பரபரப்பு

    பரபரப்பு

    ரிஷ்வானாவை வேறு யாரும் கொலை செய்தார்களா? அல்லது உள் வீட்டு வேலைதானா இது என போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் நடந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+