ஹாலில் மாமியார்... ரூமில் கணவர்.. முதல் மாடி ஏறி சென்று லாவண்யாவை குத்தி கொன்ற மர்மநபர்கள்!
மதுரையில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
மதுரை: ஹாலில் மாமியார்... ரூமில் கணவர் படுத்திருக்க, முதல் மாடியில் ஏறிச் சென்று தூங்கி கொண்டிருந்த லாவண்யாவை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர் மர்ம நபர்கள்! இந்த சம்பவம் மதுரை நகர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் - சீனியம்மாள்-.. சீனியம்மாளுக்கு 58 வயதாகிறது. மாரியப்பன் பாத்திர கடை வைத்திருக்கிறார்.. இவர்களுக்கு குமரகுரு என்ற மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.
போன 2010-ல் மாரியப்பன் இறந்து விட்டார். அதனால் பாத்திரக்கடையை சீனியம்மாள் கவனித்து வருகிறார்.. இவருக்கு உதவியாக குமரகுரு உள்ளார். குமரகுருவிற்கும் கல்யாணம் ஆகிவிட்டது.. மனைவி பெயர் லாவண்யா.. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
Recommended Video

சீனியம்மாள்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லாவண்யா வீட்டின் முதல் மாடியில் மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். வீட்டின் கீழ்பகுதியில் ஒரு ரூமில் குமரகுருவும், ஹாலில் சீனியம்மாளும் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று விடிகாலை 4 மணி இருக்கும்.. 2 மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து.. முதல் மாடிக்கு கதவை உடைத்து கொண்டு சென்றுள்ளனர்.

கத்தி குத்து
அங்கே தூங்கி கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினர்.. வலியால் லாவண்ய கதற.. சத்தம் கேட்டு மூத்த மகள் எழுந்து அலறினாள்.. கீழே ஓடிப்போய் விஷயத்தை சொல்லவும், ஹாலிலேயே படுத்திருந்த சீனியம்மாள் விரைந்து வந்தார்.

ரத்த வெள்ளம்
அதற்குள் மர்மநபர்கள் கீழே இறங்க முயற்சி செய்தனர்.. அவர்களை விடாமல் சீனியம்மாள் இழுத்து பிடித்து தடுத்தார்.. இதனால் ஆவேசம் ஆன மர்மநபர்கள் சீனியம்மாளையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டனர். இதற்கு பிறகுதான் அறையிலிருந்து சத்தம் கேட்டு குமரகுரு ஓடிவந்தார்... அப்போதுதான் அம்மா ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் மாடியில் லாவண்யா இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சொத்துக்கள்?
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. உடனடியாக சீனியம்மாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. சீனியம்மாளுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது. ஆனால் லாவண்யாவை கொன்றவர்கள் யார் என தெரியவில்லை.. எதற்காக இந்த கொலை நடந்தது என்றும் தெரியவில்லை.. இவர்களுக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிகிறது.. அதனால்கூட இந்த கொலை நடந்திருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுவதார் விசாரணை மும்முரமாக நடக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications