மதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்
Recommended Video
மதுரை: மதுரை காவல் ஆணையாளர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் விரட்டி விரட்டி இளைஞரை கொன்ற சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடி மர்ம நபர்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி கொலை நடந்த இடத்திலேயே மடக்கிபிடித்தார்.
மதுரை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு வயது 22. இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் 7 நபர்கள் வந்தனர்.அவர்கள் ஆறுமுகத்தை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்து படுகொலை செய்த மூன்று நபர்களில் பாலமுருகன் என்பவரை கொலை நடந்த சம்பவ இடத்திலேயே மதுரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட பாலமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர் மீது செல்போன் திருட்டு, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல்,என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.மக்கள் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையம் பகுதியில் பட்டப்பகலில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications