நெட்டில் லீக் ஆன ஆபாச படம் : இளம் பெண் தற்கொலை - வெளிச்சத்திற்கு வந்த கொலை
பழைய காதலனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆன அதிர்ச்சியில் அந்த பெண் தனது 5 வயது மகனை விட்டு விட்டு கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கொலையும்,ப
மீரட்: நாட்டில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் சினிமாவில் வரும் கதைகளை விட திரில்லாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த சம்பவமும் அப்படித்தான் உள்ளது. சனிக்கிழமையன்று ஒரு பெண் முசாபர்நகர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலையை விசாரிக்கப் போன போலீசுக்கு அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் தலையை சுற்ற வைத்தது.
காதலிக்கும் போது நெருக்கமாக எடுத்த அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்தே அவர், தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையால் ஒரு கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த பெண்ணின் முன்னாள் காதலன் பெயர் சுபம் குமார். அவன் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்யாமல் அனுஜ்குமார் என்பவனுக்கு விற்று விட்டான்.

நெருக்கமான புகைப்படங்கள்
கேலரியில் இருந்த கவர்ச்சி புகைப்படங்களையும், நெருக்கமான ஆபாச புகைப்படங்களையும் பார்த்த அனுஜ்குமார் அதனை இணையதளத்தில் பதிவேற்றினான். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானதால் அந்த பெண்ணின் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, தனது மகனை கால்வாயின் அருகில் விட்டு விட்டு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அடிதடி கொலை
இதனையடுத்துதான் கதையில் திடீர் திருப்பமே ஏற்பட்டது. ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய அனுஜை தேடிப்போன சுபம் குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டான். மே 23ஆம் தேதி இந்த கொலை நடந்துள்ளது. இதனையடுத்து சுபம்குமாரையும் அவனது நண்பர்களையும் முசாபர் நகர் போலீசார் கைது செய்ய முயன்றனர்.

என்கவுண்டர்
போலீசில் சிக்காமல் தப்பிக்க சுபம்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டிருக்கிறான். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி சுபம்குமார் கும்பலை கைது செய்தனர். இந்த கும்பல் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் வாழ்க்கையில் பாதிப்பு
காதலிக்கும் போது நெருக்கமாக எடுத்த புகைப்படங்களால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தி அது தற்கொலையில் முடிந்தது. அந்த தற்கொலையால் ஒரு கொலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநில காவல்துறை வட்டாரத்தில் இந்த தற்கொலை, கொலை, என்கவுண்டர் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications