Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளத்தொடர்பை கண்டித்த மகன்...கேட்காத அம்மாவிற்கு நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. தினசரியும் இரண்டு மூன்று கொலைகள் கள்ளக்காதல் உறவு முறை பிரச்சினையில் நடைபெறுகிறது. சென்னை வண்டலூரில் வேறொரு ஆணுடன் வாழ்ந்த அம்மாவை பெற்ற மகனே அடித

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை இறந்த பின்னர் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த அம்மாவை பெற்ற மகனே கம்பியால் குத்தி கொலை செய்த சம்பவம் வண்டலூரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

முறைய தவறிய காதல் கடைசியில் கொலையில்தான் முடிகிறது. நூற்றுக்கணக்கான கள்ளக்காதல் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கிரைம் பீரோ பதிவேடு தெரிவிக்கிறது.

Man kills mother over her illicit affair

வண்டலூரில் கணவன் இறந்த பின்னர் ஆண் துணை தேவை என்று தேடிச்சென்ற தாயை பெற்ற மகனே கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பவானி என்பதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு பையன்கள் உள்ளனர். கடந்த 5 வருடத்திற்கு முன்பு பவானியின் கணவர் இறந்து விடவே, தனியாக மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.

சோமுமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருடன் பவானிக்கு பழக்கம் ஏற்படவே இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனையடுத்து மகன்களை விட்டு விட்டு காதலனுடன் சென்று விட்டார். தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். ராஜ்குமாருடன் மண்ணிவாக்கத்திற்கு வந்தார் பவானி அப்போது அம்மாவிடம் சென்று பெரிய மகன் சம்பத்குமார் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சம்பத்குமார் அருகில் இருந்த கம்பியை உடுத்து பவானியில் தலையிலும் வயிற்றிலும் தாக்கினார்.

கம்பி வயிற்றுக்குள் இறங்கவே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பவானி உயிரிழந்தார். பவானியை காப்பாற்ற வந்த ராஜ்குமாரும் பலத்த காயமடைந்தார் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளை விட்டு விட்டு காதலனுடன் சென்ற தாய் கடைசியில் மகன் கையினாலே மரணமடைந்துள்ளார். வண்டலூர் பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+