காவிரி டெல்டாவில் லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு- கன்னட விவசாயிகள் மிரட்டலால் அரண்டு போன பாஜக!
மண்டியா: காவிரி நதிநீர் பிரச்சனையில் அநீதி இழைக்கப்படுவதால் கர்நாடகாவின் காவிரி டெல்டா பொதுமக்கள் லோக்சபா தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என கன்னட விவசாயிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரக் கூடாது; தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் சொற்ப அளவு போனாலும் கூட குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு செத்து போவோம் என்பது கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினரின் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் 34-வது நாளாக தொடர் போராட்டம் நீடிக்கிறது. கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் இணைந்து மண்டியா நகரில் கடந்த 34 நாட்களாக இடைவிடாமல் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
மண்டியா விஸ்வேஸ்ரயய பூங்கா, மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில்தான் நாள்தோறும் இந்தப் போராட்டங்கள் தொடருகின்றன.
எத்தனை எத்தனை போராட்டம்: ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் நேற்று முன்தினம் கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் மண்டியா கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு: இந்நிலையி காவிரி பிரச்சனையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; காவிரி நதிநீர் தங்களிடம் பறிக்கப்படுகிறது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணர்த்தும் வகையில் கர்நாடகாவின் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக கடும் அதிர்ச்சி: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜகதான் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. தற்போது பாஜகவுடன் புதிய கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது. இன்னொரு பக்கம், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்நிலையில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என கர்நாடகா காவிரி டெல்டா விவசாயிகள் குரல் எழுப்புவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications