Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் VS ஜேடிஎஸ்.. டிகே சிவக்குமாரை மீறி மண்டியாவில் குமாரசாமி வெல்வாரா? ‛கை’ செம ‛ஸ்கெட்ச்’

Subscribe to Oneindia Tamil

மண்டியா: காவிரிக்கு நீர் ஆதாரமாக அமைந்துள்ள கர்நாடகாவின் மண்டியா லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் டிகே சிவக்குமாரை மீறி ஜேடிஎஸ் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி வெல்வாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடகாவில் 2 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 26, மே 7 ம் தேதிகளில் அங்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 26ம் தேதி மண்டியா லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வழங்கும் கேஆர்எஸ் அணை இங்கு தான் உள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் உள்ளன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர்.

Lok Sabha Election 2024 Is Karnataka Ex CM HD Kumarasamy will win over DK Shivakumar sketch in Mandya

மண்டியா லோக்சபா தொகுதியில் மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மண்டியா மாவட்டத்தின் மலவள்ளி, மத்தூர், மேலுகோ்டை, மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, கேஆர் பேட்டை, மைசூர் மாவட்டத்தின் கிருஷ்ணராஜநகர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. இதில் 6 சட்டசபை தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளது. கிருஷ்ணராஜ்பேட்டை சட்டசபை தொகுதி ஜேடிஎஸ் கட்சியிடமம், மேலுகோ்டை சர்வோதயா கர்நாடகா பக்சா கட்சியிடமும் உள்ளது.

ஒக்கலிகர் மக்கள்: மண்டியாவை பொறுத்தமட்டில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் உள்ளனர். இதனால் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி தான் இந்த தொகுதியில் மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. 1952 முதல் 2019 வரை மொத்தம் 21 தேர்தல்கள் (4 இடைத்தேர்தல்கள்) நடந்துள்ளன. இதில் 14 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை ஜேடிஎஸ் கட்சியும், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, ஜனதாதளம், ஜனதா கட்சி தலா ஒரு முறை வென்றுள்ளன.

வெற்றி பெற்ற பிரபலங்கள்: இந்த தொகுதியில் பல பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளன. முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், கர்நாடகா மாஜி முதல்வருமான எஸ்எம் கிருஜ்ணா 3 முறை வெற்றி பெற்றுள்ளார். மறைந்த நடிகர் அம்பரீஷ் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். நடிகை ரம்யா (பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஹீரோயின்) ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடிகர் அம்பரீஷ் மறைந்த அனுதாப அலை, காங்கிரஸ், பாஜக வேட்பாளர் நிறுத்தாமல் ஆதரவு அளித்தது உள்ளிட்டவற்றால் சுமலதா வென்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜேடிஎஸ் கட்சியின் நிகில் குமாரசாமியை (மாஜி முதல்வர் குமாரசாமி மகன்) 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

குமாரசாமி போட்டி: தற்போது சுமலதா அம்பரீஷ் பாஜகவில் உள்ளார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கர்நாடகவில் பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஜேடிஎஸ் கட்சிக்கு மண்டியா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் சார்பில் அதன் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஸ்டார் சந்துரு என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இவர்கள் 2 பேர் இடையே தான் இந்த தொகுதியில் போட்டி உள்ளது. இவர்கள் 2 பேரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் வெல்வது யார்? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சாதகம் - பாதகம்: அதன்படி பார்த்தால் இருவருக்கும் சில விஷயங்கள் சாதகமாகவும், பாதகமாகவும் உள்ளன. ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமியை எடுத்து கொண்டால் அவருக்கு மண்டியாவில் செல்வாக்கு உள்ளது. முன்னாள் முதல்வர், தனிப்பட்ட செல்வாக்கு உள்ளிட்டவை குமாரசாமிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 8 சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தான் ஜேடிஎஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது பாதகமாக உள்ளது. மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்தாலும் கூட மண்டியா லோக்சபா தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு என்பது மிகமிக குறைவு. இதனால் பாஜக கூட்டணியும் எந்த வகையிலும் குமாரசாமிக்கு உதவி செய்யாது. இது நெகட்டிவ்வாக உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் உள்ளார். இவரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இவரது செல்வாக்கால் தான் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மண்டியாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் டிகே சிவக்குமாரின் செல்வாக்கு, குமாரசாமிக்கு பெரும் நெகட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு ஒரு தொழிலதிபர். மண்டியாவை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. பணபலம் படைத்தவர் என்பதோடு டிகே சிவக்குமாரின் ஆதரவாளராக உள்ளார். டிகே சிவக்குமார் நேரடியாக ஸ்டார் சந்துருவுக்கு மண்டியா தொகுதியில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். இதனால் நிச்சயம் அவர்கள் 2 பேரும் குமாரசாமியை வீழ்த்த முழுமூச்சில் போராடுவார்கள்.

டிகே சிவக்குமார்: மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் முனைப்பில் ஜேடிஎஸ் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. அதுமட்டுமின்றி டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் போட்டியிடும் பெங்களூர் புறநகர் தொகுதியில் குமாரசாமியின் உறவினர் மஞ்சுநாத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். டிகே சுரேசை தோற்கடிக்கவே பாஜக மற்றும் ஜேடிஎஸ் இணைந்து மஞ்சுநாத்தை பெங்களூர் புறநகர் தொகுதியில் களமிறக்கி உள்ளது. இது டிகே சிவக்குமாரை கோபப்படுத்தி உள்ளது. இதனால் எளிமையாக வெல்ல வேண்டிய பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமார் தம்பியான டிகே சுரேஷ் மற்றும் பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் இடையே கடும் போட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தனது தம்பியை வீழ்த்த துடிக்கும் குமாரசாமியை மண்டியாவில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்கமார் உறுதியாக உள்ளார்.

வெல்வது யார்?: கடந்த சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் கோட்டையான மண்டியா மாவட்டத்தை உடைத்து காங்கிரஸ் கட்சியினரை டிகே சிவக்குமார் வெல்ல வைத்தார். அந்த பார்முலாவை மீண்டும் டிகே சிவக்குமார் கையில் எடுத்துள்ளார். மேலும் தொகுதியில் உள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தீவிரமாக பணியாற்ற டிகே சிவக்குமார் பணித்துள்ளார். இருந்தாலும் கூட கடந்த முறை குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மண்டியாவில் தோற்றார். ஆனால் குமாரசாமிக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மேலும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு மண்டியாவில் அனைத்து இடங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் மண்டியா தொகுதியில் இந்த முறை நிச்சயம் குமாரசாமி மற்றும் ஸ்டார் சந்துரு ஆகியோர் இடையே கடும் போட்டி இருக்கும். இருப்பினும் யார் வெல்வார்கள்? என்பதை அறிய ஜுன் 4ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+