மங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பை.. உள்ளே வெடிகுண்டு.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது?
பெங்களூர்: இன்று காலை மங்களூர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம கருப்பு நிற பையில் வெடிகுண்டு சாதனங்கள் இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் பெங்களூர், மைசூருக்கு அடுத்தபடியாக மங்களூர் அதிக மக்கள் வந்து செல்லும் மாவட்டம் ஆகும் . மங்களூர் விமான நிலையத்திற்கு அதிக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்று கருப்பு நிற பை ஒன்று இன்று காலை கிடந்துள்ளது.
இதை கண்டுபிடித்த விமான நிலைய அதிகாரிகள், சந்தேகம் கொண்டு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அங்கு வேகமாக வந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

வெடிக்குண்டு
அந்த கருப்பு நிற பையில் பேட்டரி, வயர், டைமர் வாட்ச், வெடிகுண்டிற்கான சாதனங்கள், வெடிகுண்டை இயக்க செய்யும் டெடோன்டோர் கருவி, வெடிமருந்து எல்லாம் இருந்துள்ளது. இதனால் உடனடியாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அசம்பாவிதம்
வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்த்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைதான் இந்த சோதனையை செய்தது. ஆனால் இந்த குண்டு அப்போது செயல்படும் நிலையில் இல்லை. இதனால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படை
இதன்பின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை சோதனை செய்தது. அதில், ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், இந்த வெடிகுண்டு பையை வைத்துவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இண்டிகோ விமான புக்கிங் கவுண்டருக்கு அருகே இவர் அந்த பையை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

யார் இவர்
இவர் யார் என்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ஆட்டோ எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தற்போது மங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications