3000 ஆபாச வீடியோ: மங்களூர் விமான நிலையத்தில் இறங்கியதும் பிரஜ்வலை 'தூக்க' ரெடியாக இருக்கும் போலீஸ்!
மங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்கள் எடுத்த பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவின் மங்களூர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்படக் கூடும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு. அத்துடன் பலாத்காரம் செய்த பெண்களை மிரட்டி ஆபாச படங்களையும் எடுத்தார் என்பதும் புகார். இது தொடர்பாக கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குகளில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ளூர் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் சிபிஐக்கு சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவால் இனி தப்பவே முடியாது என்ற நிலையில் ஜெர்மனியில் இருந்து ஒவ்வொரு நாடாகா தப்பிச் செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய தகவல்களின் படி துபாயில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவின் பெங்களூர் அல்லது மங்களூர் விமான நிலையத்துக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பெங்களூர் அல்லது மங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கினால் அங்கேயே பிரஜ்வலை கைது செய்யும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
அப்படி விமான நிலையத்தில் கைது செய்யப்படும் பிரஜ்வல் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவார். அதன் பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் பிரஜ்வலிடம் விசாரணை நடத்துவர்.
துபாயில் இருந்து மங்களூர் விமான நிலையத்துக்கு இரவு 6.15 மணிக்கு கடைசி விமானம் வரும். அனேகமாக இந்த விமானத்தில்தான் பிரஜ்வால் வரக் கூடும் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால் மங்களூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications