கர்நாடகா: உத்தர கன்னடாவில் பெருமழை- நிலச்சரிவில் சிக்கி தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் பரிதாப பலி!
மங்களூர்: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடாவில் பெருமழை கொட்டித் தீர்த்ததில் நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 லாரி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தர கன்னடாவின் அங்கோலா அருகே குமட்டா- சிர்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக காத்திருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னண்ணன், சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய 3 தமிழர்கள், கர்நாடகா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்தெடுத்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடகாவின் அணைகள் நிரம்பி உள்ளன.

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெருமழை பெய்தது. இப்பெருமழையால் அங்கோலா அருகே குமட்டா-சிர்சி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
குமட்டா-சிர்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வீடுகள், சாலையோர ஹோட்டல் ஆகியவை மண்ணோடு மண்ணாக புதையுண்டன. இச்சம்பவத்தில் வீடுகளில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காத்திருந்த 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காத்திருந்த போது 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் கியாஸ் டேங்கர் லாரி ஓட்டுநர்கள். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தாத்தையங்கார்பட்டி சின்னண்ணன், நாமக்கல் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி கரையாம்புதூர் சரவணன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி முருகன் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மங்களூர் எண்ணெய் சுத்தகரிப்பு தொழிற்சாலையில் இருந்து சமையல் எரிவாயுவை உப்பள்ளி என்ற பகுதிக்குக் கொண்டு செல்லும் வழியில் நிலச்சரிவில் சிக்கி 3 தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் கங்கவாலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி மீட்கப்பட்டுள்ளது. 18 டன் சமையல் எரிவாயுவுடன் டேங்கர் லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போதும் எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications