Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur Assembly Election 2022 First Phase: மணிப்பூர் சட்டசபைத் தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் பகல் 1 மணி வரை 48.88% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இன்று முதல் கட்டமாக 38 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. 173 வேட்பாளர்கள் நாளை நடக்கும் தேர்தலில் களமிறங்குகிறார்கள் . இதில் 15 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். மொத்தம் 20 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் 22 தொகுதிகளில் மார்ச் 5ம் தேதி நடக்க உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இன்று 38 தொகுதிகளுக்காக வாக்களிப்பவர்களில் 10.49 லட்சம் பேர் பெண்கள், 9.58 லட்சம் பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 Manipur assembly election 2022 first phase voting Live Updates

Feb 28, 2022, 7:20 pm IST

மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 78.03% வாக்குகள் பதிவானது
Feb 28, 2022, 7:20 pm IST

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் இயந்திரங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Feb 28, 2022, 6:16 pm IST

மணிப்பூர் மாநில முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை 2017 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 86 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Feb 28, 2022, 3:23 pm IST

மணிப்பூர்: வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் நிகழ்ந்ததால் பதற்றம்- பலத்த பாதுகாப்பு
Feb 28, 2022, 3:01 pm IST

மணிப்பூர்: கெய்ராவ் கேந்த்ராவில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு
Feb 28, 2022, 3:01 pm IST

மணிப்பூர்: வாங்கேஹி தொகுதியில் பாஜக தொண்டர் கள்ள ஓட்டு போட முயன்றதால் பதற்றம்
Feb 28, 2022, 2:58 pm IST

மணிப்பூர் முதல் கட்ட வாக்குப் பதிவு: சூரசந்த்பூர் மாவட்ட தேர்தல் வன்முறையில் ஒருவர் படுகாயம்
Feb 28, 2022, 2:46 pm IST

மணிப்பூர் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிடில் ப்ளான் பி ரெடியாக இருக்கிறது- பரபரப்பை கிளப்பும் காங்.
Feb 28, 2022, 2:13 pm IST

மணிப்பூர் முதல் கட்ட தேர்தலில் வன்முறை நிகழ்ந்த இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை
Feb 28, 2022, 1:51 pm IST

மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி வரையிலான வாக்குப் பதிவு நிலவரம்

மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை  தேர்தல்: பகல் 1 மணி வரையிலான வாக்குப் பதிவு நிலவரம்
இம்பால் கிழக்கு - 46.11% இம்பால் மேற்கு - 52.15% பிஸ்னபூர்- 50.48% சூரசந்த்பூர்- 40.37% கங்போக்பி 61.30%
Feb 28, 2022, 1:48 pm IST

மணிப்பூர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 48.88% வாக்குகள் பதிவு
Feb 28, 2022, 1:38 pm IST

மணிப்பூரிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் விநியோகம்
Feb 28, 2022, 1:24 pm IST

மணிப்பூர் முதல் கட்ட வாக்குப் பதிவு: பகல் 12 மணி வரை 33% வாக்குகள் பதிவு
Feb 28, 2022, 1:11 pm IST

மணிப்பூர் சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: பகல் 12 மணி வரை 30 % வாக்குகள் பதிவு
Feb 28, 2022, 1:05 pm IST

மணிப்பூர்- முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் சமூக வலைதளங்களில் பாஜக- காங்கிரஸ் தீவிர பிரசாரம்
Feb 28, 2022, 12:48 pm IST

மணிப்பூர்: சிங்காத் தொகுதியில் பாஜக, குக்கி மக்கள் கூட்டணி தொண்டர்களிடையே மோதல்
Feb 28, 2022, 12:32 pm IST

மணிப்பூர் சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: பல இடங்களில் துப்பாக்கி சூடு- கல்வீச்சு; பாஜக- காங். மோதல்
Feb 28, 2022, 12:20 pm IST

முற்பகல் 11.30 மணி வரையிலான மணிப்பூர் வாக்குப் பதிவு நிலவரம்
Feb 28, 2022, 11:58 am IST

மணிப்பூர்: இம்பால் மேற்கு மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற முயற்சிப்பதாக பாஜக- காங்கிரஸ் பரஸ்பரம் புகார்
Feb 28, 2022, 11:58 am IST

மணிப்பூர்: கெய்ராவ் சட்டசபை தொகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Feb 28, 2022, 11:57 am IST

மணிப்பூர் முதல் கட்ட தேர்தல்: முற்பகல் 11.30 மணி வரை 27.3% வாக்குகள் பதிவு
Feb 28, 2022, 11:57 am IST

மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் 5-வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டி
Feb 28, 2022, 11:56 am IST

மணிப்பூர்

மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தல்: காலை 10 மணிவரை சுமார் 12% வாக்குகள் பதிவு
Feb 28, 2022, 11:56 am IST

மணிப்பூர்:

பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்
Feb 28, 2022, 11:55 am IST

ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா- அனைவரும் வாக்களிக்க வேண்டும்: மணிப்பூர் அமைச்சர் பிஸ்வஜித்சிங்
Feb 28, 2022, 11:54 am IST

மணிப்பூர் சட்டசபை தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு- பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து உன்னிப்பாக கண்காணிக்கும் தலைவர்கள்
Feb 28, 2022, 11:54 am IST

மணிப்பூரில் பெண்கள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்த கட்சிக்கே வாக்களியுங்கள்- காங்கிரஸ் ட்வீட்
Feb 28, 2022, 11:53 am IST

பொருளாதார தடைகள் இல்லாத மணிப்பூர்; வளர்ச்சிகளுடனான மணிப்பூர் உருவாக வாக்களியுங்கள்- பாஜக
Feb 28, 2022, 11:52 am IST

ஆளுநர் இல.கணேசன்

முந்தைய தேர்தல்களில் தமிழகத்தின் சென்னை தியாகராயர் நகரில் வாக்களித்தார் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன். மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தலில் சகோல்பந்த் தொகுதியில் ஆளுநர் இல.கணேசன் இன்று வாக்களித்தார்
Feb 28, 2022, 11:52 am IST

மணிப்பூர்: நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிக்கும் வாக்காளர்கள்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+