சென்னையில் கடும் பனிமூட்டம் + மேகமூட்டம்.. மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்ன அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை நீடித்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் கடும் பனி மூட்டம் இருந்தது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பருவமழை: தமிழ்நாட்டின் குடிநீர் தேவையை வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீர்த்து வைத்துவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்த மழை பொழியவில்லை. எனவே தமிழ்நாட்டு மட்டுமல்லாது தென்னிந்தியாவே பெரும் நெருக்கடியை எதிர்க்கொண்டது. குறிப்பாக கேரளாவில் அணைகளுக்கு நீர் போதுமான அளவு வராததால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மறுபுறம் விளை நிலங்களும் போதுமான நீர் இன்றி வறட்சியடைய தொடங்கின.

புயல்: கர்நாடகாவின் நீர் பிடிப்ப பகுதிகளில் மழை லேசாக தலையை காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதால், அம்மாநிலத்தின் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. எனவே மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்து, அணை கடும் வறட்சியை எதிர்கொண்டது. மேட்டூரில் போதுமான தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்னை பீக்கில் இருந்த நிலையில்தான் வடகிழக்கு பருவமழை எட்டி பார்த்தது. கூடவே மிக்ஜாம் புயலையும் இழுத்துக்கொண்டு வந்தது.
வெள்ளம்: புயல் மழையால் வட மாவட்டங்களின் நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. மழை ஒரு கட்டத்தில் தீவிரமடைந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. வட தமிழகம் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நிலையில், தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கியது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை முழுவதும் ஒரே நாளில் பெய்ததால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. இந்த 4 மாவட்டங்களிலும் வெள்ளம் வடிந்திருந்தாலும், இயல்பு நிலை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? என்பது குறித்து வானிலை அய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழக நிலவரம்: அதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை: சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications