Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை கோர்ட்டுக்கு நேரில் வந்த சாஹல்.. தனஸ்ரீ வர்மாவுடன் அவசர அவசரமாக விவாகரத்து.. 2வது திருமணம்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரபல யூட்யூபரான தனஸ்ரீ வர்மா இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனஸ்ரீ வர்மாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.4.75 கோடி கொடுக்க சாஹல் ஒப்புக் கொண்ட நிலையில், விவாகரத்து வழக்கிற்காக இருவரும் நேரில் ஆஜராகினர்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரபல யூட்யூபரான தனஸ்ரீ வர்மா இருவருக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் பயிற்சி கற்றுக்கொள்ள சென்ற சாஹல், தனஸ்ரீ வர்மாவுடன் நட்பாக இருந்தார். அது நாளடைவில் காதலாக மாறி, திருமணத்தில் முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர்.

Mumbai Family Court granted divorce to PBKS Player Yuzvendra Chahal and Dhanashree Verma

பிரபலமான தனஸ்ரீ வர்மா

சாஹலை திருமணம் செய்த பின் இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீ வர்மா பிரபலமடைந்தார். அவரை பின் தொடர்பவரின் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. இதன்பின் இன்ஸ்டாகிராமில் இன்ஃபளூயன்சராக வலம் வந்த அவர், பாடல்களுக்கு நடனமாடி பிரபலமடைந்தார். இதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டான்சராகவே களமிறங்கி கூடுதல் பிரபலமாகினர்.

சாஹல் - தனஸ்ரீ மோதல்

இதன்பின் சினிமாவிலும் கால்பதித்த தனஸ்ரீ, கிரிக்கெட் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதனை முற்றிலும் தனஸ்ரீ மறுத்த நிலையில், சாஹல் - தனஸ்ரீ இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தினர்.

விவாகரத்து

தொடர்ந்து கடந்த பிப்.5ஆம் தேதி மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். அப்போது மனுவை ஏற்ற நீதிமன்றம், 6 மாதம் கால அவகாசம் அளித்தது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கவிருப்பதால் காத்திருப்பு காலத்தை ரத்து செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தை சாஹல் நாடினார்.

ஜீவனாம்சம்

இதனைத் தொடர்ந்து காத்திருப்பு காலத்தை ரத்து செய்ததோடு, மார்ச் 21ஆம் தேதிக்குள் விவாகரத்து வழக்கை முடித்து வைக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல் சாஹல் தரப்பில் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சமாக அளிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதில் ரூ.2.37 கோடி ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும், ரூ.2.38 கோடி மீதித் தொகை விவாகரத்து பெற்றபின் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவசரமாக விவாகரத்து

இந்த நிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருநாள் மட்டும் இருக்கும் நிலையில், சாஹல் அவசர அவசரமாக விவாகரத்து பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் திருமணம்?

ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியின் போது ஆர்ஜே மஹ்வாஷ் என்ற பிரபலத்துடன் சாஹல் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் சாஹல் - ஆர்ஜே மஹ்வாஷ் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதால், அவசர அவசரமாக விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+