புறா கூடே தேவலை! மும்பையில் 1 BHK வீட்டின் வாடகை என்ன தெரியுமா? மனசாட்சியை அடகு வச்சிருப்பாங்களா?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வீட்டிற்கு மாத வாடகை ரூ 45 ஆயிரம் என விளம்பரம் வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அப்படி 45 ஆயிரம் ரூபாய்க்கு என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் எதற்கு அதிகம் செலவு செய்கிறோம் என ஆராய்ந்தால் கல்வி, வீட்டு வாடகை, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்குத்தான் இருக்கும். வீண் செலவெல்லாம் வேற டிபார்ட்மென்ட்! முக்கிய செலவுகள் , தவிர்க்க முடியாத செலவு என்றால் அவை மேற்கண்ட மூன்றும்தான்.

அதிலும் இந்த வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம் எல்லாம் இடத்திற்கு இடம் மாறுபடும். அந்த வகையில் மெட்ரோபாலிட்டன் என இருந்தால் அங்கு ஒரு மாதிரி வாடகை வசூலிக்கப்படும். மும்பை, பெங்களூர், டெல்லி, சென்னை போன்ற இடங்களில் வேலைக்காக நிறைய பேர் தங்கள் சொந்த ஊரை விட்டு புலம் பெயர்கிறார்கள்.
அவர்களுக்கு பெரிய சுமையாக இருப்பது இந்த வீட்டு வாடகைதான். அதிலும் நாம் கொடுக்கும் காசுக்கு தகுந்தாபற்போல் வீடு கிடைக்கிறதா என்றால் இல்லை! புறா கூடு போல் இருக்கும், அதுக்கு எத்தனை ஆயிரம் வாடகை வசூல் செய்வார்கள் என்பதை நினைத்து பார்த்தாலே பலருக்கு மயக்கம் வந்துவிடும். அதிலும் பொட்டல் காடாக இருந்த பகுதிகள் எல்லாம் ஐடி பார்க்குகளால் ஹார்ட் ஆப் தி சிட்டி ஆகி வருகின்றன.
இதனால் வீட்டு வாடகையும் எகிறத்தான் செய்கிறது. முடிந்தால் வா இல்லாவிட்டால் போ என்ற ரேஞ்சிற்கு உள்ளது. இத்தனை வாடகைக்கும் மக்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் டிமான்ட், அதை விட்டால் வேறு வழியில்லைதான். கனவுகளின் நகரம் என அழைக்கப்படும் மும்பையில் மக்கள்தொகை பெருக்கம் காணப்படுகிறது.
இதனால் வாடகை வீடு கிடைப்பது என்பது கடினமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதன் வாடகை அதிகமாகவே இருக்கிறது. வாடகை கொடுத்து முன்னேற முடியாத நிலை உள்ளது. மும்பையில் ஒரு வீட்டின் வாடகை கேட்டால் தலையே சுத்துகிறது. அதாவது மும்பையில் மாட்டுங்காவில் ஒரு அறை, ஹால், சமையலறை கொண்ட (1 BHK) வீட்டின் வாடகை ரூ 45 ஆயிரம் ஆகும்.
இதில் சிறிய ஒரு தூங்கும் அறை, ஹால், கிச்சன் ஆகியவை இருக்கிறது. ஹாலில் ஒரு சிறிய படிக்கட்டு இருக்கிறது. இது மாடிக்கு செல்கிறது. இந்த மாடியில் கூடுதல் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இதுகுறித்து எக்ஸ்வலைதளத்தில் ஒரு நெட்டிசன் பதிவிட்டிருந்தார்.
அதில் மாட்டுங்கா ஈஸ்ட், ஓல்ட் வைப் 1 BHK வாடகை ரூ 45 ஆயிரம் மட்டுமே என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த பலர் ஒரு சிறிய வீட்டிற்கு ரூ 45 ஆயிரம் வாடகையா என கேள்வி எழுப்புகிறார்கள். சில அரசு கல்லூரி விடுதிகளை விட இந்த வீடு மோசமாக இருக்கிறது என்கிறார்கள். பலர் அந்த வீட்டு உரிமையாளரை திட்டுகிறார்கள். பேராசை என்கிறார்கள். ரூ 45 ஆயிரம் கேட்க மனசாட்சி இல்லையா என கேட்கிறார்கள்.
மும்பையில் ஒரு ஆடம்பர வீட்டின் வாடகை ரூ 1.35 லட்சம் என ஒரு விளம்பரம் வந்தது. அந்த வீடு இரு படுக்கை அறைகளுடன் கூடிய வீடு. ஒரு குளியலறை, வாஷிங் மெஷின் இருந்தது. இந்த வீட்டின் மாத வாடகை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications