ஐபோன் இஎம்ஐ கட்ட முடியாததால் 18 வயது இளைஞர் விபரீத முடிவு..காப்பாற்ற முயன்ற பெற்றோரும் உயிருடன் இல்லை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் 18 வயது இளைஞர் ஒருவர் மலையிலிருந்து குதித்துவிடுவதாகக் கூறி சுமார் மூன்று மணி நேரம் மிரட்டல் விடுத்தார். அந்தச் சூழலின்போது, "நான் குதிக்கப் போகிறேன்" என்று அவர் தனது பெற்றோரிடம் திரும்பத் திரும்பக் கூறினார். அவரது பெற்றோரும் அப்பகுதி மக்களும் அவரை மலையின் விளிம்பிலிருந்து விலகி வருமாறு சமாதானப்படுத்த முயன்றனர். அந்த இளைஞர் விளிம்பை நோக்கி நகர்ந்தபோது, அவர் குதிப்பதைத் தடுக்க அவரது தந்தை முயன்றார். தந்தை தனது மகனைப் பிடிக்க முயன்றபோது, இருவரின் சமநிலையும் தவறி கீழே விழுந்தனர். பதற்றமடைந்த தாயாரும் சிறிது நேரத்தில் மலையிலிருந்து கீழே விழுந்தார். குடும்பத்தினர் மூவரும் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள காவ்தா மலையில் நடந்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் முரளிதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார், இவரது மகன் குணால் சந்கூடேவுக்கு 18 வயது ஆகிறது. அண்மையில் இஎம்ஐ முறையில் புதிய ஐபோன் ஒன்றை குணால் சந்கூடே வாங்கியுள்ளார். ஆனால் அதற்கு இஎம்ஐ கட்டுவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது செல்போனுக்கு இஎம்ஐ கட்டி தனக்கு சொந்தமாக்கக விரும்பிய குணால் சந்கூடே தனது தந்தை முரளிதரிடம் இஎம்ஐ பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

iPhone EMI

ஆனால் குடும்பத்தினரோ நெருக்கடியான நிதிநிலையை காரணம் காட்டி பணம் தரமுடியாத நிலை இருப்பதாக கூறியுள்ளார்கள். இதனால் அப்பா மகன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குணால், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அருகில் உள்ள கவ்டியா மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.

தகவலறிந்த அவரது தாய் சங்கீதா, தந்தை முரளிதர், உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், கிராம மக்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குணாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பஞ்சாயத்துத் தலைவர் ஐபோன் வாங்கித் தருவதாகக் கூறியும் குணால் அதைக் கேட்கவில்லை என கூறப்பபடுகிறது.

மலையின் அடிவாரத்தில் இருந்த தந்தை முரளிதர், பின்னர் மேலே ஏறி மகனிடம் பேச முயன்றுள்ளார். அப்போது திடீரென குணால் மலையிலிருந்து குதிக்க முயன்றபோது, அவரது தந்தை ஓடிச் சென்று மகனின் கையைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருவரும் மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கண் முன்னே கணவனும் மகனும் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் அதே மலையிலிருந்து கீழே குதித்து உயிரையே விட்டுவிட்டார். சில நிமிடங்களிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தால் என்ன மாதிரியான சிக்கல் வரும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் குழந்தைகளிடம் வறுமையை சொல்லி அல்லது வறுமையை காட்டி வளர்க்காமல், கேட்பதை எலலாம் வாங்கி கொடுத்து கஷ்டம் தெரியாமல் வளர்த்தால் இப்படியான துயர சம்பவங்கள் ஏற்படுவது நடக்கிறது. அதேபோல் சில பெற்றோர், தன் மகன் அல்லது மகன் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும்... நல்ல பெரிய ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவது, சக்திக்கு மீறி செலவு செய்து, தவறுகள் செய்தால் கண்டிக்காமல் இருப்பது, சிறு ஏமாற்றங்கள் கூட இல்லாமல் வளர்ப்பதை செய்கிறார்கள். அப்படி வளர்த்தால் அது குழந்தை வளர்ப்பு அல்ல. அந்த குழந்தையை அழிப்பதற்கு சமமான வளர்ப்பு.. அவர்கள் கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்து தவறான முடிவெடுக்கிறார்கள்.

எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது; தகுந்த ஆலோசனையும் ஆதரவும் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும். உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ மன அழுத்தமோ அல்லது சுய தீங்கு எண்ணங்களோ ஏற்பட்டால், உடனடியாகக் கீழே உள்ள இலவச உதவி எண்களைத் தொடர்பு கொண்டு பேசலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் : +91 44 2464 0050 (24 மணி நேரமும் செயல்படும்)

தொலை-மானஸ் - இந்திய அரசின் மனநல சேவை: கட்டணமில்லா எண்: 14416 அல்லது 1800-891-4416 (24x7 சேவை)

மாநில மனநல உதவி எண் (தமிழ்நாடு அரசு): எண்: 104

வந்தேவாலா பவுண்டேஷன் : +91 9999 666 555

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+