கல்லூரி ஃபேர்வெல்லில் கலகலப்பாக பேசிய 20 வயது மாணவி! திடீரென சரிந்து விழுந்து மரணம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கல்லூரியில் நடந்த பிரிவு உபசார விழாவின் போது (farewell party) திடீரென மயங்கி விழுந்த மாணவி மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இப்போது பார்த்தவர் அடுத்த நிமிடம் இருப்பார் என்ற நிலையில்லை என்பதை காட்டுகிறது. மகாராஷ்டிராவின் தாராஷிப் மாவட்டத்தில் பராண்டாவில் ஆர்.ஜி.ஷிண்டே எனும் கல்லூரி உள்ளது.

இந்த கல்லூரியில் பிரிவு உபசார விழா இன்று நடந்தது. இந்த விழாவை அந்த கல்லூரி மாணவி வர்ஷா காரத் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் சிரித்தபடியே தொகுத்து வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் காமெடியாகவும் பேசியிருந்தார்.
இதுகுறித்து வெளியான வீடியோவில் அந்த மாணவி பேச பேச மற்ற மாணவிகளின் சிரிப்பு சப்தம் கேட்டது. பேசிக் கொண்டிருந்த போது நடுவே ஒரு இடத்தில் நிறுத்தினார். பின்னர் மீண்டும் தொடர்ந்த நிலையில் அவர் அப்படியே சரிந்து விழுந்தார்.
உடனே மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு போய் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும் முதற்கட்ட விசாரணையில் வர்ஷாவுக்கு 8 வயதில் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாம். அதைத் தொடர்ந்து அவர் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்து வந்தார்.
அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட செல்லவில்லை என தெரிகிறது. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததால் அவருக்கு தற்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மூளை செயலிழப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
எனவே உணவு பழக்கவழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஜங்க் உணவுகளையும் துரித உணவுகளையும் அரை வேக்காட்டு உணவுகளையும், தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள். மேலும் மைதா, சர்க்கரை போன்றவற்றை சேர்க்கக் கூடாது என்கிறார்கள். அது போல் சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிகம் கொடுக்குமாறும் இறைச்சி உணவுகளை அளவோடு கொடுக்கவும் அறிவுறுத்துகிறார்கள். அது போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வோர், விளையாட்டு வீரர்கள் என பயிற்சியின் போது சரிந்து விழுந்து இறக்கும் சம்பவங்களும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications