15 நிமிடம்.. தரையிறங்கும் முன் திடீரென மோசமாக குலுங்கிய.. விஸ்தாரா விமானம்.. 3 பயணிகள் படுகாயம்!
மும்பை: மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற விஸ்தாரா விமானத்தில் ஏற்பட்ட டர்புலென்ஸ் கோளாறு காரணமாக 3 பேர் காயம் அடைந்தனர்.
பொதுவாக விமானங்கள் பறக்கும் போது பல்வேறு காரணங்களால் அதில் turbulence எனப்படும் பிரச்சனை ஏற்படும். விமானம் வேகமாக குலுங்குவது, ஆடுவது, வேகம் திடீரென அதிகரிப்பது turbulence எனப்படும்.
வானிலை காரணமாகவும், வெப்பநிலை மற்றும் அழுத்த வேறுபாடு காரணமாக இது போல turbulence ஏற்படலாம். விமானங்கள் இப்படி turbulence பிரச்சனையில் சிக்குவது வழக்கம். ஆனால் இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவது இல்லை.

குலுக்கல்
இந்த நிலையில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற விஸ்தாரா விமானத்தில் ஏற்பட்ட turbulence கோளாறு காரணமாக 3 பேர் காயம் அடைந்தனர். விமானம் தரையிறங்குவது சில நொடிகளுக்கு முன் இப்படி வேகமாக குலுங்கி உள்ளது. இது போயிங் 737 வகை விமானம் ஆகும்.

போயிங்
இதில் 113 பயணிகள் இருந்துள்ளனர். மொத்தம் 15 நிமிடம் மிக மோசமாக விமானம் குலுங்கி உள்ளது. விமானம் விபத்துக்கு உள்ளாகிவிடுமோ என்று மக்கள் பயத்தில் மூழ்கி உள்ளனர். மிக மோசமாக விமானம் குலுங்கியதால் பயணிகள் கடும் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

சேதாரம்
ஆனாலும் விமானம் எந்த சேதாரமும், விபத்தும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, இதில் 3 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகள் விமானம் தரையிங்கியதும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம்
61 வயது நபர் ஒருவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொருவருக்கு முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு நெற்றியில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த turbulence பிரச்சனை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று விஸ்தாரா விமான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications