படுக்க வா.. இல்ல அமலாக்கத்துறை வரும்! பாஜக தலைவரின் 35 செக்ஸ் வீடியோக்கள் - லீக் செய்த மராத்தி சேனல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சம் காட்டி பெண் அரசு அதிகாரிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறி மகாராஷ்டிரா மாநில பாஜக துணை தலைவர் சோமையாவின் 35 வீடியோக்கள் வெளியாகி அதிர வைத்து இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மகராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று உள்ளது. அக்கட்சியின் தேவேந்திர பட்னவிஸ் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். சிவசேனா கட்சி பிளவு, முதலமைச்சர் மாற்றம், தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவு என எப்போதும் சூடாக இருக்கும் மகாராஷ்டிரா அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது ஆபாச வீடியோ விவகாரம்.

35 sex videos of Maharashtra BJP VP Somaiya have been released

ஒரு வீடியோ 2 வீடியோ இல்லை. மொத்தம் 35 வீடியோக்கள். அந்த வீடியோவில் இருக்கும் ஆண் வேறு யாருமில்லை. பாஜக முன்னாள் எம்.பியும் இந்நாள் பாஜக மாநில துணைத் தலைவருமான க்ரிதி சோமையாதான் அது. சமூக வலைதளங்களில் வெளியாகி புயலை கிளப்பியுள்ள அந்த 35 வீடியோக்களின் மொத்த நீளம் 8 மணி நேரமாம்.

திகைக்க வைக்கும் இந்த ஆபாச வீடியோ விவகாரம் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதில் மேலும் அதிர வைக்கும் தகவல் என்னவென்றால் பாஜக மாநில துணைத் தலைவர் சோமையாவின் வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர் அரசு பெண் அதிகாரிகள் என்பதுதான்.

ஆனால், அமலாக்கத்துறை உள்ள மத்திய புலனாய்வு நிறுவனங்களை அழைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் அதிகாரிகளை பாஜக தலைவர் சோமையா மிரட்டி, தன்னுடைய பாலியல் ஆசைக்கு அடிபணிய வைத்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கின்றனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), உத்தவ் சிவசேனா தலைவர்கள் கையில் எடுத்து கடும் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

சோமையா பல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் இதுபோல் மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார். மறுபக்கம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி மகளிர் அணி சோமையாவை பாஜகவில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டது.

இந்த விவகாரம் ஆளும் பாஜகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், பாஜக மாநில துணைத் தலைவர் சோமையாவின் வீடியோக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

35 sex videos of Maharashtra BJP VP Somaiya have been released

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் தொடர்பான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த தேவேந்திர பட்னவிஸ், இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கப்போவது கிடையாது என்றார். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய அடையாளத்தை போலீசார் விசாரித்த கண்டுபிடிப்பார்கள் என்றார்.

இதற்கிடையே ஆபாச வீடியோக்களில் சிக்கிய பாஜக மாநில துணைத் தலைவர் சோமையா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "ஒரு மராத்தி டிவி சேனல் என்னுடைய வீடியோக்களை வெளியிட்டு உள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டு உள்ளன. இதுபோல் எனது பல வீடியோக்கள் உள்ளதாக கூறியுள்ளார்கள். அந்த வீடியோக்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் பெண்களில் தவறாக நடக்கவில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+