சிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் 4 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர்.
பிவாண்டியில் 8 வருட பழமையான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அந்த குடியிருப்பு சிதிலமடைந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருப்போரை நகர நிர்வாகம் காலி செய்யுமாறு கூறிவிட்டது.
இதையடுத்து அந்த கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் 22 குடும்பத்தினரை நேற்று இரவு நகர நிர்வாகத்தினர் வெளியேற்றினர். எனினும் சிலர் வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பதற்காக இரவு அந்த கட்டடத்துக்கு சென்றனர்.
Maharashtra: Rescue operations continue at the building collapse site in Bhiwandi. The incident has claimed lives of 2 people so far. pic.twitter.com/hSLXoVlmn5
— ANI (@ANI) August 24, 2019
அப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு 4 அல்லது 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அதில் இருவரது சடலங்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications