தனிமை முகாமில் இருந்த.. 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த கயவன்.. மும்பையில் நடந்த கொடுமை
தனிமைப்படுத்தும் முகாமில் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் ஒருவர்
மும்பை: தனிமை எங்கே இருந்தாலும் பிரச்சனைதான்.. தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே தொற்று அதிகமாக இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா.. அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையத்தில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்படி பன்வேல் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்தவர்தான் 40 வயது பெண்.. அவரை ஒரு காம மிருகம் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்துள்ளது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று, குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "சம்பவம் நடந்த மையத்தில் சுமார் 400 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... இந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 40 வயது பெண் பலாத்காரத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளோம்.. குற்றவாளியையும் கைது செய்துள்ளோம்" என்றார்.
ஆனால், இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து. கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.. சில தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடு கிடைப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் என்பது தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்காக நகராட்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பகுதி ஆகும்.. பார்ப்பதற்கு குடியிருப்புகள் போல தான் இருக்கிறதாம்.. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு ரூம் தரப்பட்டுள்ளது.. அப்படி தரப்பட்ட ரூமில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. குற்றவாளியின் சகோதரர் இங்குதான் தனிமைப்பட்டுள்ளார்.
முகாமில் எல்லா வசதிகளும் உள்ளதா என்பதை சரிபார்த்து கொண்டு வந்தவர், 40 வயது பெண்ணை பார்த்ததும் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டு, நைசாக பேச்சு தந்துள்ளார்.. பிறகு நெருக்கத்தை வளர்த்து கொண்டு, சந்தர்ப்பம் பார்த்து இப்படி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பன்வேல் தாலுகா போலீஸார், அந்நபரை கைது செய்துள்ளனர்.. மேலும் அவருக்கு உடனே டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டது.. குற்றவாளிக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம்.. தனிமைப்படுத்தும் முகாமிலேயே 40 வயது பெண்ணை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications