பெரிய ட்விஸ்ட்.. பாஜக வேட்பாளருக்கு ஆதரவளித்த ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கவுன்சிலர்கள்!
மும்பை: பாஜகவும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் சித்தாந்த ரீதியாக எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இந்நிலையில் தான் திடீரென்று பாஜகவின் வேட்பாளருக்கு ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கவுன்சிலர்கள் ஆதரவளித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் நகராட்சியில் நடந்துள்ளது. இந்த நகராட்சியில் நியமன கவுன்சிலருக்கான தேர்தல் நடந்தது. நகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் சேர்ந்து நியமன கவுன்சிலரை தேர்வு செய்வார்கள்.

அந்த வகையில் பாஜக சார்பில் அகோட் நகராட்சியின் முன்னாள் தலைவர் ராமச்சந்திர பரேத்தியாவின் மகன் ஜிதின் போட்டியிட்டார். அதேபோல் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் தாஜ் ராணா ஆகியோர் போட்டியிட்டார். ஆனால் வேட்பு மனுவை குறித்த நேரத்துக்குள் தாக்கல் செய்யவில்லை என்று தாஜ் ராணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனல் பாஜகவின் ஜிதின் தனி ஆளாக போட்டியில் இருந்தார். அவரது வெற்றி உறுதியானது. இந்நிலையில் தான் அவருக்ககு ஓவைசியின் கட்சியை சேர்ந்த 5 ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். கவுன்சிலர்களான அப்ரின் அன்ஜும் ஷரிஃபோதீன், தில்ஷாட்பி ரசாக் கான், ரேஷ்மா பர்வீன் முகமது அசீம், டாக்டர் யூசுப் கான் ஹாதிக் கான் மற்றும் ஹன்னான் ஷா சுல்தான் ஷா ஆகியோர் பாஜக வேட்பாளர் ஜிதினுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜிதின் வெற்றி பெற்றார்.
இதுபற்றி அகோலா மேற்கு சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ சாஜித் கான் பதான் கூறுகையில், ‛‛ஏஐஎம்ஐஎம் கட்சி பாஜகவின் ‛பி' டீமாக செயல்பட்டு வருகிறது. வெளிப்படையாக எதிர்த்தாலும் கூட வசதிக்கு ஏற்ப ஒன்றிணைந்து கொள்வார்கள். இதற்கு உதாரணம் தான் அகோட் நகராட்சி சம்பவம். பாஜகவுக்கும், ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருகட்சிகளும் பிளவுப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications