அடேங்கப்பா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு கொரோனா.. முழு லாக்டவுன் கொண்டு வர முடிவு?
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,50,000-க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பதிவாகி உள்ளது.

அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 63,294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதவாது கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் ஒரு மாநிலத்தில் அதுவும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுதான்.

கொரோனாவில் இருந்து மேலும் 34,008 பேர் குணமடைந்தனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 5,65,587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 34,07,245 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 27,82,161 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.மொத்த உயிரிழப்பு 57,987 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சியினர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications