4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான பரிதாபம்... மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Recommended Video

மும்பை: மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையின் புறநகரான செம்பூர் பகுதியில் உள்ள சர்கம் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 14 வது தளத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு தளத்தில் பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கு, மள, மளவென பரவியது.

7 பேர் உயிரிழப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த போராடினர். மேலும், வீட்டினுள் மாட்டிக்கொண்ட மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணி மறுபக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இதில், சிலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சுவர் இடிந்தது
பல மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மற்ற தளங்களில் கடுமையான வெப்பம் நிலவியதால் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கும் பணிகள் நடைபெற்றன. கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.

தீயணைப்பு வீரர் காயம்
இதற்கிடையே, பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம்
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்தின் போது, வீட்டில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதால் தான் பெரிய ஆபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications