டீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கடன் கொடுக்க மறுத்த டீச்சர்.. கத்தியால் குத்திய மாணவன்-வீடியோ

    மும்பை: டீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. தர மாட்டீங்களா... என்று கேட்டு கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துவிட்டார் 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன்!

    மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். திருமணமான இவர், கணவனை விட்டுபிரிந்து மகனுடன் வசித்து வருகிறார்.

    இதனால் சுற்றுவட்டார பகுதி பிள்ளைகளுக்கு டியூஷன் நடத்தி தன் வாழ்க்கையை ஓட்டி கொள்கிறார். இந்த டியூஷனில் 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன் படித்து வந்துள்ளான்.

    மறுப்பு

    மறுப்பு

    இந்நிலையில் அந்த மாணவனின் அம்மா, டியூசன் டீச்சரிடம் வந்து வீட்டு செலவுக்கு பணம் கடனாக கேட்டதாக தெரிகிறது. ஆனால், டியூசன் டீச்சர் பணம் தர மறுத்ததால், மாணவனின் அம்மாவுக்கும், டியூஷன் டீச்சருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. தன் அம்மாவை டீச்சர் திட்டுவதை பார்த்து மாணவன் செம கடுப்பில் இருந்திருக்கிறான் போலும்.

    கத்திகுத்து

    கத்திகுத்து

    நேற்று வழக்கம் போல டியூசனுக்கு வந்தான் மாணவன். டியூஷன் முடியும் வரை அமைதியாக உட்கார்ந்திருந்தவன், கிளம்பும்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டீச்சரின் வயிற்றில் சரமாரி குத்திவிட்டான். இதனால் மயங்கி சரிந்த டீச்சர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மாணவன் கைது

    மாணவன் கைது

    கொலை குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, டியூசன் டீச்சரைக் கொன்ற 9 வயது மாணவனை கைது செய்தனர்.இதையடுத்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன் அம்மாவை திட்டிவிட்டார். பணம் கேட்டும் அவர் தரவில்லை.. அந்த கோபத்தில் கத்தியால் குத்தினேன் என்று சொன்னான்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    பிறகு, தன் அப்பாவிடம் சொல்லும்போது, "அந்த டீச்சரை குத்திக்கொலை செய்தால் 2 ஆயிரம் ரூபாய் தருவதாக சிலர் சொன்னதாகவும், அப்படி கொல்லவில்லை என்றால், ஆத்தில தூக்கி போட்டு கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள், அதனால்தான் கொன்றேன்" என்றும் சொல்லி உள்ளான். ஆக மொத்தம், சிறுவன் டீச்சலை கொன்றது குறித்து 2 விதமாக வாக்குமூலம் தந்துள்ளதால் போலீசார் குழம்பி உள்ளனர். எனினும் சிறுவனிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+