சுஷாந்துடன் கடும் சண்டையிட்ட ரியா.. வீட்டைவிட்டு செல்வதற்கு முன்னர் 8 ஹார்டு டிஸ்க்குகள் அழிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சுஷாந்த் சிங் வீட்டை விட்டு முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி செல்வதற்கு முன்னர் 8 ஹார்டு டிஸ்க்குகள் அழிக்கப்பட்டதாக நடிகரின் நண்பரும், அந்த பிளாட்டில் வசிப்பவருமான சித்தார்த் பிதானி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, நடிகருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து நடிகர் சுஷாந்தின் நண்பரும் அவர் வசித்த பிளாட்டில் வசிக்கும் சித்தார்த் பிதானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரியா சுஷாந்த்
இதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரியா மற்றும் சுஷாந்திற்கு இடையே சண்டை நடந்துள்ளது. இதையடுத்து ரியா, சுஷாந்தின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் வெளியேறுவதற்கு முன்னர் 8 ஹார்டு டிஸ்க்குகள் அழிக்கப்பட்டன. ரியாவுடன் மகேஷ் பட்டின் வாட்ஸ் ஆப் உரையாடல்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளன. இதிலிருந்து இருவரும் சேர்ந்து ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்த எதையோ அழிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

தீபாவளி
ரியாவும் சுஷாந்தும் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றது தெரியவந்துள்ளது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் என்ன இருக்கிறது என சித்தார்த்திற்கு தெரியவில்லை. அதே நேரத்தில் அந்த ஹார்டு டிஸ்க்கில் உள்ள தகவல்களை அழிக்க ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணரும் வரவழைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு
அவரை யார் வரவழைத்தது என தெரியவில்லை. அந்த ஹார்டு டிஸ்க் அழிக்கப்படும் போது ரியாவும் சுஷாந்தும் அங்கிருந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரியா மீது போதை மருந்து பயன்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

இரு முறை விசாரணை
இந்த நிலையில் சுஷாந்திற்கும் போதை பொருள் பழக்கம் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை சித்தார்த்தையும் சுஷாந்தின் சமையல்காரர் நீரஜையும் சிறப்பு விசாரணை குழு இரு முறை விசாரணை நடத்தி விட்டது. தேவைப்பட்டால் சித்தார்த்திடம் மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications