Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதார் பூனாவாலா போல் வாட்ஸ்-அப் மெசேஜ்.. சீரம் நிறுவன இயக்குனரிடம் ஒரு கோடி அபேஸ் செய்த கும்பல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: புனேயில் உள்ள சீரம் நிறுவன இயக்குனரிடம் அதார் பூனாவாலா வாட்ஸ்-அப் செய்வது போல் நூதன முறையில் ஒரு கோடி ரூபாயை மர்ம கும்பல் அபேஸ் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில்நுட்பங்கள் வளர வளர மோசடி முறைகளும் நவீனமாயக்கி கொண்டுதான் இருக்கின்றன என்று சொல்லலாம்.

பொது இடங்களில் பணப்பைகளை திருடிய காலம் போய் தற்பொது தொழிலுநுட்பத்தை பயன்படுத்தி புதுப் புதுவகையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்

அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்

குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுகிறோம்.. அப்டேட் செய்ய ஏடிஎம் எண் கொடுங்கள்..என பேசி பணத்தை வங்கி கணக்கில் இருந்து திருடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதேபோல், வாட்ஸ் அப் எண், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் நமக்கு தெரிந்தவர்கள் போல காட்டிக்கொண்டு அவசரமாக கடன் கேட்டு மெசேஜ் செய்து பணத்தை சுருட்டும் மோசடியும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஒரு கோடி மோசடி

ஒரு கோடி மோசடி

அரசு உயர் அதிகாரிகள் பெயரிலும் இத்தகைய மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மிகப்பெரும் நிறுவனமான மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் அதிகாரியிடம் இருந்து ஒரு மர்ம கும்பல் 1 கோடி ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டே என்பவரிடம் மோசடி கும்பலினர் ரூபாய் ஒரு கோடியை அபேஸ் செய்துள்ளனர்.

அதார் பூனாவாலா பெயரில் வாட்ஸ் அப்

அதார் பூனாவாலா பெயரில் வாட்ஸ் அப்

கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே. இவர் வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த வாட்ஸ்-அப் மெசேஜ் தற்போது சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான அதார் பூனாவாலா என்ற பெயரில் வந்தது. மேலும் அதன் முகப்பு படத்தில் அதார் பூனாவாலா படம் இருந்தது.

மோசடி கும்பல் கைவரிசை

மோசடி கும்பல் கைவரிசை

மேலும் அந்த வாட்ஸ் அப் மெசேஜில், தான் சீரம் நிறுவனத்தின் பவுண்டர் அதார் பூனாவாலா என்றும், அவசரமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து ஆயிரத்து 554 ரூபாயை இந்த அக்கவுண்டுக்கு அனுப்பும்படியும் கூறப்பட்டு இருந்தது. இந்த மெசேஜை முதலில் பார்த்ததும் சதீஷ் தேஷ்பாண்டே உடனடியாக அவர் கூறியிருந்த அக்கவுண்டிற்கு உதவியாளர்கள் மூலம் அனுப்பி வைத்தார். பணத்தை அனுப்பி வைத்த பின்னர் தான், 'பணம் கேட்டு வாட்ஸ்-அப்பில் எந்த ஒரு மெசேஜும் அதார் பூனாவாலா அனுப்பவில்லை' என்பது சதீஷ் தேஷ்பாண்டேக்கு தெரிய வந்தது. வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து மோசடி கும்பல் கைவரிசை காட்டியது அவருக்கு தெரியவந்தது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதையடுத்து சீரம் நிறுவனத்தின் சார்பில் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதார் பூனாவாலா பெயரில் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சீரம் நிறுவனத்திடம் அதன் பவுண்டர் பெயரில் மர்ம கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+