Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணாமலை ஒரு ஜீரோ.. சொந்த தொகுதியில் தோற்றுவிட்டு பிரதமர் போல பில்டப் கொடுக்கிறார்!" ஆதித்ய தாக்கரே

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானது இல்லை என்று அண்ணாமலை கூறியது அங்கு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு அங்குள்ள பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். அண்ணாமலையை ஜீரோ என்றும் சொந்தத் தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர் என்றும் தாக்கரே சாடியுள்ளார்.

மும்பையில் வரும் 15ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. பல மாநில பட்ஜெட்களை விடவும் மும்பைக்கான பட்ஜெட் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மும்பையில் தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வரும் சூழலில், அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்ய முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அங்குச் சென்றார்.

Aaditya Thackeray Slams BJP Annamalai Lost Deposit Pretends to be Next PM Over Mumbai Remark

அண்ணாமலை

அப்போது அவர் பல்வேறு இடங்களில் தமிழர்களிடையே பேசினார். அப்போது ஓர் இடத்தில், மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் இல்லை என்றும் அது ஒரு சர்வதேச நகரம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்தே அங்குப் பெரிய விவாதமாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவையும் மராட்டியர்களையும் அவமதிக்கும் வகையில் அண்ணாமலை பேசிவிட்டதாகக் கண்டங்கள் எழுந்துள்ளன. அங்குள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாகச் சிவசேனா இதைப் பெரிய விஷயமாக மாற்றி வருகிறது.

இதற்கிடையே அண்ணாமலையின் கருத்துகள் குறித்து தாக்கரே சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். பாஜகவில் அண்ணாமலை ஒரு ஜீரோ என்ற ஆதித்ய தாக்கரே, சொந்தத் தொகுதியிலேயே டெபாசிட் வாங்க முடியாதவர் அண்ணாமலை என்றும் தேர்தலில் தோற்றுவிட்டு, நாட்டின் அடுத்த பிரதமரைப் போலப் பேசிக் கொண்டு இருக்கிறார் என்றும் சாடினார்.

ஆதித்ய தாக்கரே தாக்கு

மேலும், அண்ணாமலை மும்பை குறித்து எங்களுக்கு அறிவுரை வழங்கத் தேவையில்லை என்ற ஆதித்ய தாக்கரே, அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துவிட்டனர் என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஜீரோ ஆகிவிட்டார். சொந்தத் தொகுதியிலேயே அவரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.. சட்டசபைத் தேர்தலில் தோற்றுவிட்டு, அடுத்த பிரதமரைப் போல பில்டப் செய்து கொள்கிறார்.

தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் வெவ்வேறு மாநிலங்கள். இங்கு வந்து மும்பை என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலை சொல்லத் தேவையில்லை.. மும்பை பற்றிப் பேச அவர் யார்? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர்.. இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.

விளக்கம்

அண்ணாமலையின் இந்தக் கருத்து பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில், அங்குள்ள பாஜக தலைவர்கள் இது குறித்து விளக்கமளித்திருந்தனர். அதாவது மும்பையைப் பெருமைப்படுத்துவதற்காகவே அண்ணாமலை இந்தக் கருத்தைச் சொன்னதாகவும் மும்பையை அவமதிக்கும் நோக்கம் அண்ணாமலைக்கோ பாஜகவுக்கோ இல்லை என்று அவர்கள் விளக்கமளித்தனர்.

கண்டனம்

அவரது இந்த கருத்துக்கு மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. அண்ணாமலை மீண்டும் மும்பையில் கால் வைத்தால் அவர் மீது கருப்பு மை வீசப்படும் என மிரட்டல் விடுத்தது.. இது தொடர்பாக அவர்கள் மேலும், "அண்ணாமலை மீண்டும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால்.. மராத்தி ஏகிகரன் சமிதி அவர் முகத்தில் கருப்பு மை வீசும். மகாராஷ்டிராவுக்குத் துரோகம் இழைக்க வேண்டாம்! மகாராஷ்டிராவை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல உத்தவ் தாக்கரேவின் சகோதரரும் எம்என்எஸ் கட்சி தலைவருமான ராஜ் தாக்கரேவும் அண்ணாமலைக்கு மிக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+