Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிந்து போன விஷயம்.. மும்பை ஐகோர்ட் நீதிபதியாகும் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளரான ஆர்த்தி சாத்வே நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக கடும் விவாதப் பொருளாகியுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்தவரிடமிருந்து அரசுக்கு எதிரான வழக்குகளில் மக்கள் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வரும் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சாத்வே இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ஆர்த்தி சாத்வே. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஆர்த்தி சாத்வே பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நிலையில், பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

aarti-sathe-ex-bjp-spokesperson-appointed-bombay-high-court-judge-sparks-political-controversy

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வழக்கறிஞரான இவரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரைத்தது. இதன்படி, அவர் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக எப்படி நியமிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி எம்.எல்.ஏ. ரோகித் பவார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது:- "ஒரு நீதிபதி ஆளும் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருக்கும்போது, அரசுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தை நாடும் மக்கள் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? பொதுமேடைகளில் ஒரு அரசியல் கட்சியில் வெளிப்படையாகச் செயல்பட்ட ஒருவரை நீதிபதியாக அறிவிப்பது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடிகளில் ஒன்றாகும்.

பாரபட்சமற்ற தீர்ப்புகளை வழங்குவாரா?

இது இந்திய நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையை மோசமாகப் பாதிக்கும். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக முகமாக இருந்த சாத்வே, 2024 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம். ஆனால், நீதித்துறை நியமனச் செயல்முறைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிடுகின்றன. அவரது பெயர் 2025 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டிருந்தால், அதற்கான நேர்காணல் 2023 ஆம் ஆண்டே நடந்திருக்க வேண்டும்.

விவசாயிகள் தற்கொலை, நில மோசடி அல்லது அரசால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் பின்னணி கொண்ட ஒரு நீதிபதி பாரபட்சமற்ற தீர்ப்புகளை வழங்குவாரா? அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளரை நீதிபதியாக நியமிப்பது அரசியல் அமைப்பு மீதான தாக்குதல் மட்டுமன்றி, துரோகமும் கூட. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பாஜகவுடனான அனைத்து உறவுகளையும்

அதேபோல, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் கூறுகையில், "இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே ஜனநாயகமும், அரசியலமைப்பும் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகின்றன. சுதந்திரமான அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டல்படி நடக்கின்றன. நீதித்துறைக்குள்ளும் இதுபோவது கவலைப்பட வேண்டிய மிகவும் மோசமான விஷயமாகும்" என்றார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளரான கேசவ் உபாத்யே இவ்விவகாரம் குறித்து கூறுகையில், "ஆர்த்தி சாத்வே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொண்டார். கடந்த காலங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நீதிபதிகளாகி, மீண்டும் எம்.பி.க்களான சம்பவங்கள் நடந்துள்ளன. நீதித்துறையில் நியமனம் பெறுவதைத் தடுக்க, அரசியல் தொடர்பு ஒன்றை மட்டுமே காரணமாகக் கூற முடியாது" என்றார்.

கருத்து கூற விரும்பவில்லை

இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சாத்வேவும், பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "அரசியல் கட்சியின் பதவிகள் அனைத்திலிருந்தும் நான் விலகிவிட்டேன். எனவே, அந்த விவகாரம் முடிந்துவிட்டது. ஆகவே, வேறு எதுவும் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+