மும்பை கல்லூரிக்குள் சர்ப்ரைஸாக சென்ற ரஜினிகாந்த்.. ஷாக்கான மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!
மும்பை தனியார் கல்லூரி விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
மும்பை: மும்பை தனியார் கல்லூரி விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. இந்த டிசம்பர் மாதத்துடன் அவரின் அரசியல் அறிவிப்பிற்கு இரண்டாம் வயது முடிய போகிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்தான் தற்போது ரஜினி தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார்.

வரிசையாக கபாலி, காலா, பேட்ட படங்களில் நடித்த அவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர் இதை போலீசாக நடிக்கிறார்.
மும்பையில் இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு இடையில் மும்பையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
மும்பை கல்லூரிக்குள் சர்ப்ரைஸாக சென்ற ரஜினிகாந்த்.. ஷாக்கான மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ! pic.twitter.com/sUPnWyCqPW
— Oneindia Tamil (@thatsTamil) August 1, 2019
கல்லூரி விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்த அவர், கல்லூரி வளாகத்திற்குள் செல்லும் வீடியோதான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அவர்தான் விருந்தினராக வருகிறார் என்பது கல்லூரியில் மாணவர்கள் பலருக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினி வளாகத்திற்குள் வந்ததும் அவரை பார்த்து ஷாக்கான மாணவர்கள், தலைவா, சூப்பர் ஸ்டார் என்று கத்தி கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications