கொள்ளை அழகு செல்ல பாப்பா.. யார் இந்த குட்டி இளவரசி... அசத்திய ஏரின்!
அசின் தனது குழந்தையின் போட்டோவை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
மும்பை: இந்த குட்டி பாப்பா யார் என்று தெரிகிறதா?
நம்ம சூப்பர் ஹீரோயின் அசின் மகள்தான்! பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து, தனக்கு இணையாக இருந்தவர்களையும், முன்னணியில் இருந்த ஹீரோயின்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உட்கார்ந்து கொண்டாரே.. அதே அசின்தான்!

லவ் மேரேஜ்
டாப்பில் இருக்கும்போதே பாலிவுட் பக்கம் போய் அங்கேயும் நடிக்க ஆரம்பித்தார். பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் ராகுல் சர்மாவுடன் லவ் ஆகி பிறகு 2016-ல் கல்யாணமும் செய்து கொண்டார்.

தகவலே இல்லை
இதனால் ரசிகர்கள் அசினின் படம் வராமல் ஏங்கி போய்விட்டனர். பிறகு கடந்த 2017-ம் வருடம் அசினுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் குழந்தை பெயர், முகம் எதுவுமே வெளியிடப்படல்லை. அதன்பிறகு அசின் பற்றிய எந்த தகவலுமே வராமல் போய்விட்டது. இந்நிலையில், தனது செல்ல மகள் போட்டோவை அசின் வெளியிட்டுள்ளார். அதற்கு காரணம் நேற்று குழந்தையின் முதல் பிறந்த நாள் என்பதால்தான்!

பெயர் விளக்கம்
இதற்காக அசினும், ராகுலும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் குழந்தையின் படங்களை எக்கச்சக்கமாக எடுத்து பதிவிட்டுள்ளார்கள். குழந்தையின் பெயர் ஏரின் என்றும் தெரிவித்துள்ளனர். தங்கள் இருவரின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு இந்த பெயரை வைத்ததாக விளக்கமும் அளித்துள்ளனர்.
|
பளிச் பளிச்
ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த குட்டி இளவரசியை நாங்கள் இந்த உலகத்திற்கு வரவேற்றோம். ஆனால் காலம் ஏன் இவ்வளவு வேகமாக பறக்கிறது? எனது மகள் ஏரினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வளர வேண்டும்?'' என்று பதிவிட்டுள்ளார். ராகுல், அசினின் ட்விட்டர் பக்கங்களில் ஏரின் பாப்பாவின் போட்டோக்கள் பளிச் பளிச்சென மின்னுகிறது!!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications