தந்தை, மகனோடு படுக்கை பகிர்ந்தவர் இவர்தான்.. நடிகை செலினா ஜெட்லியிடம் வம்பிழுத்த நபர்!சுளீர் பதிலடி
மும்பை: பாலிவுட்டில் பிரபல நடிகையான செலினா ஜெட்லி பற்றி அவதூறு பரப்பும் வகையில் ஒருவர் செயல்பட்டார். இதையடுத்து அந்த நபரை பார்த்த நடிகை செலினா ஜெட்லி ட்விட்டரில் அவருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாராட்டையும் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது நடிகர், நடிகைகள் பற்றி அவதூறான கருத்துகள், படங்களை பதிவிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசில் புகார்கள் அளிக்கப்படுகின்றனர். சில வேளைகளில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது 2001ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் செலினா ஜெட்லி. இவர் அதே ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்று 4வது இடம் பிடித்துள்ளார். அதன்பிறகு செலினா ஜெட்லி திரைத்துறையில் கால்பதித்தார். 2003ம் ஆண்டில் செலினா ஜெட்லி அறிமுகம் ஆனார்.
அதன்பிறகு பிரபல பாலிவுட் நடிகையாக மாறியவர் தான் செலினா ஜெட்லி. ஜனாசீன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம இவர் அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ளார். டாம் டிக் அன்ட் ஹாரி, அப்னா சப்னா மனி மனி, நோ என்ட்ரி, கோல்மால் ரிட்டன்ஸ் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்த அவர் 2020ல் மீண்டும் சீசன்ஸ் க்ரீட்டிங்க்ஸ் திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கினார்.
செலினா ஜெட்லியும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் ட்விட்டர் சமூக வலைதளத்தில் செலினா ஜெட்லி பற்றி அவதூறான கருத்து பரப்பப்பட்டது. அதாவது ட்விட்டரில் உமைர் சந்து என்பவர் இயங்கி வருகிறார். வெளிநாட்டு தணிக்கை வாரியத்தில் உறுப்பினர் என கூறி கொள்ளும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகை செலினா ஜெட்லி மட்டும் தான் பாலிவுட்டில் பர்தீன் கான் மற்றும் அவரது தந்தை பெரோஸுடன்படுக்கையை பகிர்ந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும் அந்த பதிவில் செலினா செட்லியின் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார்.
இந்த ட்விட்டர் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஜனாசீன் என்பது தான் செலினா ஜெட்லியின் முதல் படமாகும். இந்த படத்தை நடிகரான பெரோஸ் கான் தயாரித்தார். தனது மகனும் நடிகருமான பர்தீன் கானுக்காக இந்த படத்தை அவர் தயாரித்தார். அவருக்கு ஜோடியாக தான் செலினா ஜெட்லி அறிமுகம் ஆனார். இந்த பட வாய்ப்பை செலினா ஜெட்லி பெற்றது எப்படி? என்பது தொடர்பாக தான் உமைர் சந்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் நடிகை செலினா ஜெட்லி கடுமையாக அவரை விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛உங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனையை சரிசெய்ய வேறு வழிகள் உள்ளன. மருத்துவரிடம் செல்ல நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்'' என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிலடிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications