உருக்குலைக்கப்பட்ட இஸ்ரேல்! 'தொடர்பு' துண்டிக்கப்பட்ட நடிகை.. பதறிய பாலிவுட் திரை உலகம்- க்ளைமாக்ஸ்!
மும்பை: இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்தி வரும் யுத்தம் காரணமாக அங்கு சிக்கியிருந்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா குறித்த தகவல்கள் தெரியாமல் பதற்றம் ஏற்பட்டது. தற்போது நுஷ்ரத் பருச்சா பாதுகாப்பாக இந்தியா திரும்பி உள்ளார்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் ஜிஹாதிகள் அதிதீவிர யுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு இஸ்ரேல் தரப்பும் சரமாரியான பதிலடி கொடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் இருதரப்பிலும் 500க்கும் அதிகமானோர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

100க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான இந்த யுத்தம் முன்னெப்போதையும் விட மிக உக்கிரமாக இருந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகளை ஹமாஸ் ஜிஹாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் அத்தனை பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்; அப்படி விடுதலை செய்யப்படாவிட்டால் பிணைக் கைதிகளை கொல்வதற்கு நேரம் எடுக்காது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதனிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டும் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தி வருகிறது.
இஸ்ரேலில் நடிகை நுஷ்ரத் பருச்சா: இந்நிலையில் இஸ்ரேலில் நடைபெறும் 39-வது ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா அங்கு சென்றிருந்தார். நுஷ்ரத் பருச்சா நடித்த அகெல்லி திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இஸ்ரேல் சென்றிருந்தார்.
நுஷ்ரத் பருச்சாவால் பதற்றம்: தற்போதைய யுத்தத்தின் நடுவே நுஷ்ரத் பருச்சாவும் சிக்கிக் கொண்டதாக அவருடன் சென்ற சிலர் தகவல் அனுப்பினர். இதனால் நுஷ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள பாலிவுட் திரை உலகம் பல முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் நுஷ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள முடியாததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
#WATCH | Actress Nushrratt Bharuccha arrives at Mumbai airport from Israel https://t.co/kLfmKomeN3 pic.twitter.com/FqyhOtj9FZ
— ANI (@ANI) October 8, 2023
திரைப்படம் போலவே : இத்தனைக்கும் நுஷ்ரத் பருச்சா நடித்த அகெல்லி திரைப்படம் ஈராக் பாலைவனத்தில் ஒருவித அசாதாரண சூழலில் சிக்கும் நபர் பாதுகாப்பாக வெளியேறுவதை மையமாகக் கொண்டது. தற்போது அதே சூழ்நிலையில் நுஷ்ரத் பருச்சாவும் சிக்கியது பாலிவுட் திரை உலகை அதிர்ச்சி அடைய வைத்தது.
மும்பை திரும்பினார் நுஷ்ரத் பருச்சா: இப்பதற்றத்தின் பின்னணியில் இன்று பிற்பகல் நுஷ்ரத் பருச்சா, பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போதும் எந்த கருத்தையும் நுஷ்ரத் பருச்சா தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications