கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ராவை கண்ட இடத்தில் தொட்டு வர்ணித்த தொழிலதிபர்.. மும்பை போலீஸ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: நீ கவர்ச்சியாக இருப்பதால் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் மீது பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா புகார் அளித்துள்ளார்.

மாடல்கள், நடிகைகள் எல்லாம் நாளிதழ்களின் அட்டை படங்களுக்காக லேசான கவர்ச்சியை புகைப்படமாக எடுத்து அதை நாளிதழ் நிறுவனங்கள் பிரிண்ட் போட அனுமதிப்பார்கள். அந்த புத்தகங்களும் நன்றாக விற்பனையாகும்.

ஆனால் எந்த ஒரு நடிகையும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை பிரசுரிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கவர்ச்சி இருக்கும் ஆனால் ஆடையின்றி இருக்காது. ஆடையின்றி புகைப்படங்களை பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஒரே நடிகை பாலிவுட்டை சேர்ந்த ஷெர்லின் சோப்ரா.

Actress Sherlyn Chopra gave complaint agaisnt a businessman who gave sexual torture

இவர் நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு நிறைய ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். நிறைய பேர் இவரது ரசிகர்களாக அன்றாடம் முளைக்கிறார்கள். இந்தியின் முன்னணி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்திற்கும் ஷெர்லினுக்கும் அண்மையில் ஒரு மோதல் ஏற்பட்டது. தனது கணவரை ஷெர்லின் அபகரிக்க பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை ராக்கி முன் வைத்திருந்தார்.

ஆனால் தற்போது இருவரும் சமரசம் ஆகி ஒன்று சேர்ந்துள்ளனர். தனது குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறு ஏச்சு பேச்சுகளுக்கும் ஷெர்லினிடம் ராக்கி சாவந்த் மன்னிப்பு கேட்டுள்ளாராம். இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Actress Sherlyn Chopra gave complaint agaisnt a businessman who gave sexual torture

இதுகுறித்து ஷெர்லின் கூறியிருப்பதாவது: மும்பை தொழிலதிபர் ஒருவர் துபாயிலிருந்து எனக்காக வந்திருப்பதாக கூறினார். மேலும் என்னை ஹோட்டலில் சந்திக்க விரும்புவதாக கூறினார். மதியம் சந்திக்க அழைத்தார், ஆனால் எனக்கு ஷூட்டிங் இருந்ததால் எனது மேலாளருடன் அவர் கூறிய ஹோட்டலுக்கு மாலை பொழுதில் வந்தேன்.

அங்கு இருந்த நபர் தான் சுனில் பரஸ்மானி லோதா என அறிமுகம் செய்து கொண்டார். அவர் என்னிடம் ஒரு வீடியோ ஆல்பம் பாடல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு நான் சம்மதித்தேன். தொழிலதிபர் என்னை வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். மேலும் நான் கவர்ச்சியாக இருப்பதாகவும் சொன்னார். எனது மேனேஜரிடம் பாடல் தயாரிப்புக்காக அட்வான்ஸ் தொகையை கொடுத்தார்.

பின்னர் சிறிது நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் வீட்டிற்கு கிளம்ப முற்பட்ட போது, அவர் தன்னிடம் வாகனம் இல்லாததால் தான் சொல்லும் இடத்தில் இறக்கிவிட முடியுமா என கேட்டார். நானும் ஓகே சொல்லிவிட்டு, என்னை முதலில் என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவரை அவரது வீட்டில் இறக்கிவிடுமாறு என் டிரைவரிடம் சொன்னேன்.

Actress Sherlyn Chopra gave complaint agaisnt a businessman who gave sexual torture

என் வீடு வந்தவுடன் அந்த நபர் என் வாட்டை பார்க்க முடியுமா என கேட்டார். நானும் வாங்க என அழைத்துச் சென்றேன். பிறகு அவர் என் வீட்டிலிருந்தே சாப்பாட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் சோபாவில் அமர்ந்து மது அருந்தினார். எனது மார்பில் கை வைத்தார். நான் அதிர்ந்தேன். உடனே நான் கவர்ச்சியாக இருப்பதாக என்னை வர்ணித்தார். நான் எனக்கு இதெல்லாம் பிடிக்காது நீங்கள் உடனே கிளம்புங்கள் என்றேன்.

உடனே அவர் மன்னிப்பு கேட்டார். பின்னர் தனது போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என கூறி என் அறைக்கு வந்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது நான் கவர்ச்சியாக இருப்பதால் தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறினார். உடனே நான் எதிர்த்ததால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என ஷெர்லின் கூறியிருந்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் சுனில் லோதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+