"அன்று சிவப்பு கம்பளத்தில் கால் வைக்காதது தப்புதான்".. உணரும் நக்மா.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
மும்பை: ராஜ்யசபா எம்பியாகும் தகுதி எனக்கில்லையா என கேட்டு தனது 18 ஆண்டுகால அதிருப்தியை கொட்டித் தீர்த்த நடிகையும் அரசியல்வாதியுமான நக்மாவின் அடுத்த முடிவுகள் எப்படி இருக்கும்? தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகியாக நடித்த நக்மா, திடீரென சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இதையடுத்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபட விரும்பினார்.
பாஜக அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்த நிலையிலும் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து நக்மாவை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்த நிலையிலும் நக்மா, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

நக்மாவுக்கு பதவி
அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு தமிழகம், புதுவை ஆகிய இரு மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அனைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும், அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் நக்மா காங்கிரஸ் கட்சிக்காக சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

ரஜினிகாந்துடன் சந்திப்பு
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில் சென்னை வந்த நக்மா, ரஜினிகாந்தை நேரில் போய் சந்தித்து பேசினார். இதனால் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை காங்கிரஸுக்கு அறுவடை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் பேசப்பட்டது. எனினும் தமிழகத்தின் பதவியும் நக்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல்
சுமார் 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருந்த நக்மாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2004-ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் சீட்டை கையில் வைத்திருந்து நக்மாவின் வரவிற்காக காத்திருந்தது.

குஷ்பு நக்மா
ஆனாலும் நக்மா காங்கிரஸ் பக்கம் போய்விட்டார். தற்போது அடுத்த கட்டமாக நக்மா என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. குஷ்புவும் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் பாஜகவுக்கு தாவினார். அங்கு வந்த கையோடு 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நக்மா அதிருப்தி
அந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கான அங்கீகாரத்தை பாஜக கொடுத்தது. எனவே அவரை போல் நக்மாவும் பாஜகவுக்கு வர முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. நக்மாவின் அதிருப்தியை பார்த்த பாஜக எப்படியாவது அவரை தட்டி தூக்கிவிடும் என தெரிகிறது. இப்போது இல்லாவிட்டாலும் ஆண்டுதோறும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகும் என்பதால் அடுத்த முறையாவது நக்மாவுக்கு பாஜக சார்பில் எம்பி பதவி கிடைக்கும்.

அடுத்த கட்ட நகர்வு என்ன
இல்லாவிட்டாலும் மாநில கட்சிகளில் நக்மா இணைந்தாலும் இணைவார் என தெரிகிறது. கஷ்டப்பட்டு உழைத்தும் அதற்கேற்ப பலன் கிடைக்காவிட்டால் யாராக இருந்தாலும் வலி இருக்கத்தான் செய்யும். அதிலும் சோனியா உறுதி அளித்தும் கொடுக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை. அவரவர் கட்சியில் சேரும் போதே ராஜ்யசபா எம்பி பதவி உள்ளிட்டவைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நக்மாவின் 18 ஆண்டு பொறுமை என்பது சாதாரணமல்ல என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications