பெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட்
மோடியின் குகை தியானத்தை நடிகை ட்விங்கிள் கன்னா கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
மும்பை: "ஆன்மிகப் புகைப்படங்களை பார்த்த பிறகு, பயிலரங்கு ஒன்றை ஆரம்பிக்கிறேன். எல்லோரும் அதில் கலந்து கொள்ளுங்கள். அதன் பெயர் 'தியான போட்டோகிராபி - போஸ்களும் கோணங்களும்' என்று பிரபல நடிகை ட்விங்கிள் கன்னா பிரதமர் மோடியின் குகை தியானத்தை கிண்டலடித்து ட்வீட் போட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் சனிக்கிழமை கேதார்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
பின்னர் குகைக்குள் சென்று விடிய விடிய தியானம் செய்தார். தியானம் செய்வது தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகின.

தங்கும் அறை
குகைக்குள் பிரதமர் செல்லும்போதும் கேமரா, கட்டாந்தரையில் தியானம் செய்யாமல், பஞ்சு மெத்தை மேல் உட்கார்ந்து தியானம் செய்கிறார். அது குகையே இல்லை. குகை போல வடிவமைக்கப்பட்ட தங்கும் அறை போல உள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் சற்று நேரத்திற்கெல்லாம் வெளியாக ஆரம்பித்தன.

வாடகை உண்டு
மேலும், "உல்லாச தங்கும் அறைகளில் என்னென்ன வசதிகள் உண்டோ, அவை அத்தனையும் அந்த குகை போன்ற அறையில் உண்டு. ஒரு நாள் வாடகை ரூ.990 லிருந்து ரூ. 3000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று சம்பந்தப்பட்ட குகையின் உரிமையாளர் ஊடகங்களிடமே தெரிவித்திருந்தார்.

ட்ரெண்ட்
இதையடுத்து, சமூக ஊடகங்களில் பிரதமர் என்றும் பார்க்காமல், நெட்டிசன்கள், மோடியின் தியானத்தை கிண்டல் அடித்து வருகின்றனர். 3 நாள் ஆகியும், மோடியின் இந்த குகை தியானம், ட்ரெண்டிலேயே இருந்து வருகிறது.

போட்டோ வைரல்
இந்நிலையில், மோடியின் தியானத்தை பாலிவுட் நடிகை ட்விங்கிள் கன்னா கிண்டல் அடித்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் "கடந்த சில நாட்களாக நிறைய ஆன்மீக போட்டோக்களை பார்த்துவிட்டோம். இப்போது நானும் தியானம் செய்வது போட்டோ எடுப்பது எப்படி, போஸ் கொடுப்பது எப்படி என்பது பற்றி பயிலரங்கு நடத்தப்போகிறேன். எல்லோரும் அதில் கலந்துகொள்ளுங்கள். திருமணத்தில் போட்டோ எடுக்கும் தொழிலுக்கு அடுத்து இதுதான் பெரிய தொழிலாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் பெயர் 'தியான போட்டோகிராபி - போஸ்களும் கோணங்களும்" என பதிவிட்டுள்ளார்.
|
நாய் பொம்மை
அத்துடன் சிரித்து கொண்டே தியானம் செய்வது போல ஒரு போட்டோவும் பதிவிட்டுள்ளார். ஒரு பெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மைக்கு பக்கத்தில் இந்த தியானத்தை செய்வது போல உட்கார்ந்துள்ளார் ட்விங்கிள் கன்னா. இந்த போட்டோதான் இப்போது வைரலாகிறது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications