”அயோத்தியில்” ஆட்டம் காட்ட முயன்ற சிவசேனா.. 15 நாட்களில் மகாராஷ்டிராவிலேயே மண்ணை கவ்வ வைத்த பாஜக
மும்பை: யார் இந்துத்துவா என்ற போட்டியில் அயோத்திக்கு ரயிலில் சிவசேனா தொடர்களை ஆதித்யா தாக்கரே அழைத்துச் சென்ற 15 நாட்களிலேயே அம்மாநில ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.
Recommended Video
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜகவுக்கு 106 இடங்கள் கிடைத்தன. பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

வளைக்க முயன்ற பாஜக
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

சிவசேனா மீது புகார்
சிவசேனா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதன் இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகி காங்கிரஸ் சொல்வதை கேட்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் கைது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் போன்றவை சிவசேனா கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மறுபக்கம் நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவும் அனுமன் சலிசா சர்ச்சையை கொண்டு வந்து சிவசேனா இந்துத்துவ கொள்கையிலிருந்து தடம் புரண்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அயோத்தி பயணம்
இந்த நிலையில் கடந்த் 15 ஆம் தேதி மகாராஷ்டிரா அமைச்சரும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்ரு ராமர் கோயிலில் பூஜை செய்தார். சிவசேனா கட்சியின் எதிர்கால தலைவராக அறியப்படும் 32 வயதான ஆதித்யா தாக்கரே தனியாக அயோத்திக்கு செல்வது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக தனது தந்தை உத்தவ் தாக்கரேவுடன் அவர் அயோத்திக்கு சென்றிருக்கிறார்.

8,000 தொண்டர்கள்
ஆதித்யா தாக்கரேவின் அயோத்தி பயணத்தை ஒட்டி 8,000 சிவசேனா தொண்டர்கள் மும்பை மற்றும் தானேவிலிருந்து தனி ரயிலில் அயோத்திக்கு சென்றனர். அதற்கு முதல் நாளே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் அயோத்தியில் முகாமிட்டனர். பாஜகவின் இந்துத்துவ கொள்கை போலியானது என விமர்சித்து வரும் சிவசேனா கட்சி, தாங்கள் இன்னும் இந்துத்துவ கொள்கையில் நிலைத்து இருப்பதை காட்டுவதற்காகவே ஆதித்யா தாக்கரே அயோத்தி சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் அப்போது தெரிவிக்கிறார்கள்.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஜூன் 30 மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உத்தவ் தாக்கரே பதவி விலகல்
ஆளுநரின் நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தனது கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications