சல்மான் கானை சோதனை செய்த அதிகாரி மீது நடவடிக்கையா? உண்மையில் என்ன நடந்தது?: சிஐஎஸ்எப் விளக்கம்
மும்பை; பாலிவுட் நடிகர் சல்மான் கானை சோதனை செய்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சிஐஎஸ்எப் மறுத்துள்ளது. அதோடு அந்த அதிகாரியின் செயலை பாராட்டி அவருக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டதாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி மும்பை ஏர்போர்ட் விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சல்மான் கான் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலைய டெர்மினலில் சல்மான் கானை நிறுத்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரி சோம்நாத் மோகன்டி அவரிடம் சோதனை மேற்கொண்டார். சல்மான் கானின் போர்டிங் பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சோதனை செய்தார்.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எல்லோரிடமும் செய்யப்படும் சோதனைதான் இது. சல்மான் கான் நடிகர் என்பதால் அவருக்கு விதிவிலக்கு எல்லாம் கொடுக்காமல் சோம்நாத் மோகன்டி சோதனை மேற்கொண்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டு அது இணையத்திலும் வைரல் ஆனது.
அதோடு சோம்நாத் மோகன்டி செய்தி தொலைக்காட்சி ஒன்றிலும் சல்மான் கானை சோதனை செய்தது குறித்து பேட்டி அளித்து இருந்தார். இந்த சம்பவம் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்த நிலையில்தான், சல்மான் கானை சோதனை செய்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் மோகன்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இவரை போனை உயர் அதிகாரிகள் பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும், இவர் பேட்டி கொடுத்ததை அதிகாரிகள் விரும்பவில்லை என்றும், இவருக்கு எதிராக துறை ரீதியான தண்டனை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக இணையத்தில் வெளியான செய்திகளை சிஐஎஸ்எப் மறுத்துள்ளது. அந்த அதிகாரியின் செயலை பாராட்டுகிறோம். அவர் தனது பணியை செய்து இருக்கிறார்.
அவர் தனது வேலை விதிப்படியே நடந்துள்ளார். இதனால் அவரை பாராட்டும் வகையில் அவருக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டதாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications