"முதல் முயற்சி தோல்வி".. அஜித் பவார் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? 2வது முறை தரையிறங்கியபோது நடந்த சோகம்
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக தனி விமானம் இன்று காலை விபத்தில் சிக்கியது. வானில் இருந்து தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த அஜித் பவார் உள்பட 5 பேரும் பலியாகினர். இந்நிலையில் தான் விமானம் முதல் முறை தரையிறங்க முயன்று முடியாமல் போனதும், அதன்பிறகு 2வது முறையாக தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் தான் நேற்றைய தினம் மும்பையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் துணை முதல்வர் அஜித் பவார் பங்கேற்றார். அதன்பிறகு இன்று காலையில் அவர் சிறிய ரக தனி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதிக்கு புறப்பட்டு சென்றார்.
அஜித் பவாருடன் அவருடைய ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர், 2 பைலட்டுகள் விமானத்தில் பயணித்தனர். பராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் வானில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் அஜித் பவார் உள்பட 5 பேரும் பலியாகினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விமானம் விபத்தில் சிக்கியபோது என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக Flightradar 24 செயலி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
Flightradar24 செயலி என்பது இந்தியா உள்பட உலகம் முழுவதும் விமானங்களின் இயக்கங்களின் லைவ் அப்டேட்டுகளை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான், அஜித் பவார் விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பாக அந்த செயலியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இன்று காலையில் தனி விமானம் விபத்தில் சிக்கியதில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் 2வது முயற்சியாக தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது'' என்று கூறப்பட்டுள்ளது.
Indian media reporting the crash of a business jet this morning has claimed the life of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar and 4 others. The aircraft was attempting a second approach to Baramati Airport when it crashed. https://t.co/0RKiD9sZVU pic.twitter.com/1kcoWgc3I1
— Flightradar24 (@flightradar24) January 28, 2026
இதன்மூலம் அஜித் பவார் சென்ற விமானம் இன்று காலையில் முதல் முறையாக தரையிறங்க முயன்றுள்ளது. ஆனால் அந்த விமானம் தரையிறங்குதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதையும், இதனால் மீண்டும் அந்த விமானம் வானில் பறந்து 2வது முறையாக தரையிறங்க முயன்றபோது விபத்தில் சிக்கியதாக இந்த பிளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.
பொதுவாக விமானங்கள் தரையிறங்கும்போது இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும். மோசமான காலநிலையால் விமானத்தில் இருந்து வெளிப்பகுதியை நன்றாக பார்க்கா முடியாதது, விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவது உள்ளிட்டவற்றால் சில சந்தர்ப்பங்களில் விமானங்கள் முதல் முயற்சியில் தரையிறங்குவது கைவிடப்படும்.
அதன்பிறகு சிறிது நேரம் அந்த விமானம் வானில் வட்டமடித்து 2வது முறையாக தரையிறங்கும். இது தான் 2nd approach என்பார்கள். அந்த வகையில் அஜித் பவாரின் விமானமும் இன்று தனது முதல் முயற்சியில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 2வது முறையாக தரையிறங்கியபோது தான் விபத்தில் சிக்கி உள்ளது.
இருப்பினும் முதல் முறை அஜித் பவாரின் விமானம் தரையிறங்குவதில் எப்படி சிக்கல் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. அநேகமாக அவரது விமானம் இன்று காலையில் பறந்தது. இதனால் Low visibility பிரச்சனையால் விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications