Ajit Pawar: அஜித் பவார் மறைவில் விடைத் தெரியாத 5 கேள்விகள்! 26 நிமிடங்கள் நடந்தது என்ன?
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பாராமதியில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பலியான சம்பவத்தில் 5 கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது. மேலும் விமானம் புறப்பட்ட 26 நிமிடங்களில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 விமானம், பலமுறை தரையிறங்க முயற்சித்தும், குறைந்த வெளிச்சம் காரணமாக பாராமதி விமான ஓடுதளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜராபு, முதற்கட்ட தகவல் படி தரையிறங்கும் நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறினார். விமானியிடம் விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் (ATC) "ஓடுதளம் தெரிந்ததா" என்று கேட்டபோது, தெரியவில்லை என விமானி பதிலளித்திருந்தாராம்.
ஓடுதளம் முதலில் தெரியாததால், விமானம் மீண்டும் மேலே பறந்து (go-around) மற்றொரு தரையிறங்கும் முயற்சிக்குத் திரும்பியது. பின்னர், ஓடுதளம் தெரிவதாக விமானி உறுதிப்படுத்தியதையடுத்து, விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. எனினும் இந்த விபத்து சில நிமிடங்களிலேயே விபத்து ஏற்பட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, விமானம் காலை 8:18 மணிக்கு பாராமதி ATC-யைத் தொடர்பு கொண்டது. 11B ஓடுதளத்தை அணுகும்போது, ஓடுதளம் தெரியவில்லை என்று தெரிவித்து, மீண்டும் மேலே செல்லத் தொடங்கியது.
விமானிகள் ஓடுதளத்தைக் கண்டதாகத் தெரிவித்ததை அடுத்து, காலை 8:43 மணிக்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், விமானியிடமிருந்து உறுதிப்படுத்தல் (read-back) கிடைக்கவில்லை. காலை 8:44 மணிக்கு, ATC அதிகாரிகள் 11B ஓடுதளத்தின் அருகில் தீ சுவாலைகளைக் கண்டனர்.
DGCA தகவலின்படி, விமானம் சுமார் 8:45 மணிக்கு விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து வந்த சார்ட்டர் விமானம், பாராமதி ஓடுதளத்தின் முனையில் மோதி விபத்தானது. துணை முதல்வர் அஜித் பவார், ஒரு பாதுகாப்பு அலுவலர், ஒரு உதவியாளர் மற்றும் இரண்டு விமானப் பணிக்குழு உறுப்பினர்கள் என ஐந்து பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரித்து வருகிறது.
புலனாய்வு அதிகாரிகள், விமானத்தின் கடைசித் தரையிறங்கும் அணுகுமுறையை சரி செய்யும் பணியில் இருந்த நிலையில், இந்தக் கோர விபத்து குறித்து ஐந்து முக்கிய கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.
1. இறுதித் தரையிறங்கும் அனுமதிக்குப் பிறகு சரியாக என்ன நடந்தது? காலை 8:43 மணிக்கு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ATC-யிடமிருந்து எந்த உறுதிப்படுத்தல் செய்தியும் கிடைக்கவில்லை. 8:44 மணிக்கு விமானத்தில் தீ சுவாலைகளை கண்டறியப்பட்டதோடு, 8:45 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானது. கடைசி சில நொடிகளில் திடீர் கோளாறு, கட்டுப்பாட்டு இழப்பு அல்லது காக்பிட் அவசரநிலை போன்ற நெருக்கடி ஏற்பட்டதா?
2. கட்டுப்பாடு இல்லாத விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சத்தில் ஏன் தரையிறங்க முயற்சி எடுக்கப்பட்டது? தரையிறங்கும் நேரத்தில் வெளிச்சமின்மை இருந்ததாக அமைச்சர் தரப்பு கூறுகிறது. முதலில் ஓடுதளம் தெரியவில்லை என விமானப் பணியாளர்கள் கூறியதும், பின்னர் மீண்டும் திரும்பி வந்ததும் நடந்தது. பாராமதி கட்டுப்பாடு இல்லாத விமான நிலையம் என அங்கு பயிற்சிப் பள்ளி பயிற்றுனர்கள் , விமானிகளால் தெரிவிக்கப்படுகிறது. வானிலை மற்றும் விமான நிலைய சூழ்நிலைகள் பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு உகந்ததாக இருந்ததா, அல்லது முதலில் தரையிறங்க முடியாமல் தவித்த போதே விமானம் மாற்று வழிக்குச் சென்றிருக்க வேண்டுமா?
3. அனுமதி கிடைத்த பின்னர் ஏன் ரேடியோவில் இருந்து எந்த தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை ? தரையிறங்க அனுமதி வழங்கப்படும் வரை விமானப் பணியாளர்கள், காற்று, வெளிச்சம் குறித்த தகவல்களைக் கேட்பது மற்றும் ஓடுதளம் காணப்படுவது குறித்த நிலை அறிக்கைகளை வழங்குவது என தொடர்பில் இருந்தனர். இறுதி அனுமதி வழங்கப்பட்ட பின்னரே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது தகவல் தொடர்பு தோல்வி, விமானப் பணியாளர் செயலற்ற தன்மை, அவசரகால பணிச்சுமை அதிகரிப்பு அல்லது திடீர் மின்சார/விமான மின்னணு கோளாறா?
4. விமானம் go-around அல்லது இறுதி அணுகுமுறையின்போது இயந்திர அல்லது எஞ்சின் கோளாறால் பாதிக்கப்பட்டதா? விமானம் ஓடுதளத்தின் விளிம்பில் தீப்பிடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் குறிப்பிட்டபடி, விமானத்திற்கு போதிய அனுமதி சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய விமான தகுதி ஆய்வுகளும் உள்ளன. எஞ்சின் செயலிழப்பு, பறவை மோதல், எரிபொருள் கசிவு, மின்சாரத் தீ, அல்லது தீப்பிடிப்பை ஏற்படுத்திய கடினமான தரையிறக்கம் போன்ற காரணங்கள் உள்ளனவா?
5. தரையிறங்கும் அணுகுமுறை நிலைத்தன்மையுடன் இருந்ததா மற்றும் நிலையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? விமானியின் விருப்பப்படி "கண்காணிப்பு வானிலை நிலைமைகளில்" (visual meteorological conditions) இறங்க விமானத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. முதலில் ஓடுதளத்தைக் காணத் தவறிய விமானப் பணியாளர்கள், பின்னர் அனுமதிக்கு முன் அதைக் கண்டதாகத் தெரிவித்தனர். SOP படி அணுகுமுறை நிலைப்படுத்தப்பட்டதா, அல்லது பாதுகாப்பாக தரையிறங்க விமானம் மிக உயரமாக/வேகமாக/தாமதமாக வந்ததா?
அடுத்து என்ன நடக்கும்? இந்த விபத்து நடந்ததற்கான காரணங்களை முழுமையாக அறிய, விமான விபத்து புலனாய்வு பிரிவினர், இப்போது விமானத் தகவல்கள், காக்பிட் குரல் பதிவுகள், விமானப் பராமரிப்புப் பதிவேடுகள் மற்றும் விமான நிலையம்/வானிலை தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகும் வரை, விபத்துக்கான உண்மையான காரணம் ஒரு மர்மமாகவே இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications