அஜித் பவார் மரணத்தால் பாஜக ஆட்சிக்கே ஆபத்து.. மகாராஷ்டிர அரசியலை மொத்தமாக மாற்றிய விமான விபத்து!
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் ஏற்கனவே சில கருத்து வேறுபாடுகளும் வார்த்தை மோதல்களும் கடந்த சில மாதங்களாகவே இருந்தன. அதிலும் அங்கு இரு மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அப்போது கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. வெளிப்படையாகவே பாஜகவும் சிவசேனாவும் விமர்சித்துக் கொண்டன. இந்தச் சூழலில் அஜித் பவாரின் மரணம் எதிர்பாராத மரணம் அங்கு பாஜக ஆட்சியை ஆபத்தில் தள்ளி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜக- ஒருங்கிணைந்த சிவசேனா இடையே பல ஆண்டுகளாகக் கூட்டணி இருந்தது. ஆனால், 2019 தேர்தலுக்குப் பிறகு முதல்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்படவே இந்தக் கூட்டணி முடிந்தது. இருப்பினும், 2022ல் தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டே கலகம் செய்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கவே இந்தக் கூட்டணி மறுமலர்ச்சி பெற்றது. ஓராண்டில் அஜித் பவாரும் சரத் பவாரிடம் இருந்து கட்சியை உடைத்துக் கொண்டு வந்தார்.

ஷிண்டே
ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் துணை முதலமைச்சர்களாகவும் இருந்தனர். 2024 சட்டமன்றத் தேர்தல் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் போனது. ஆனால், 2024 மகாராஷ்டிரச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே பூசல்கள் ஆரம்பித்தன. அதில் அங்குள்ள 288 தொகுதிகளில் பாஜக 132ல் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் இது பெரும்பான்மையை விட 13 இடங்கள் குறைவாகும். மறுபுறம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் என்.சி.பி. 41 இடங்களையும் கைப்பற்றின.
தனது ஆட்சிக்குக் கிடைத்த வெற்றிதான் இது என்பதால் தனக்கே முதல்வர் பதவி வேண்டும் என்றார் ஷிண்டே! ஆனால், பாஜக சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும், ஷிண்டேவுக்கும் வாய்ப்பில்லை. இதனால் துணை முதல்வர் பதவியை ஏற்றார். ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்கவில்லை என்றாலும் கூட அவரை கழற்றிவிட்டுவிட்டு பாஜகவும்- என்சிபியும் ஆட்சியை அமைக்கும் என்பதை உணர்ந்தே ஷிண்டே இந்த முடிவை எடுத்தார்.
ஏன் முக்கியம்
பாஜகவைப் பொறுத்தவரை அவர்களுக்கும் இது பிளஸ் தான்! ஷிண்டே, அஜித் பவார் என இருவருமே இருப்பதால்.. யாராவது ஒருவர் முரண்டு பிடித்தாலும் இன்னொரு நபரை வைத்துச் சமாளிக்கலாம் என இருந்தது. இந்தச் சூழலில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் நிலைமை மொத்தமாக மாற்றியது. முதலில் மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வட் மாநகராட்சிகளுக்கான தேர்தலில் ஷிண்டே சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் தனித்துவிடப்பட்ட அஜித் பவார் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனது சித்தப்பா சரத் பவாருடன் கைகோர்த்தார். இது யாரும் எதிர்பார்க்காத மூவ்!
குழப்பம்
அதேபோல மும்பை மேயர் யார் என்பதிலும் முடிவு கிடைக்கவில்லை. அங்குப் பல ஆண்டுகளாகச் சிவசேனாவை சேர்ந்த ஒருவரே மேயராக இருந்துள்ளதால் அதை விட்டுக்கொடுக்க ஷிண்டேவுக்கு மனமில்லை. ஆனால், அதி இடங்களில் வென்றதால் தங்களுக்கே மேயர் பதவி வேண்டும் என்கிறது பாஜக! இப்படியொரு குழப்பமான சூழலில்தான் நேற்று புதன்கிழமை காலையில் பாராமதியில் அஜித் பவார் விமானம் விபத்துக்குள்ளானது.
ஆபத்து
இது மகாராஷ்டிராவுக்கு ஒரு மூத்த தலைவரை மட்டுமல்லாமல், மகாயுதிக்கு ஒரு முக்கிய முகத்தையும், ஷிண்டேயின் அரசியலை கவுன்டர் செய்ய உதவக்கூடிய பாஜகவின் ஒரு வலுவான தலைவரையும் இழக்கச் செய்தது. அஜித் பவார் எம்எல்ஏக்கள் சரத் பவார் தரப்புக்குச் சென்றால் அது ஷிண்டே கையை ஓங்க வைக்கும். அப்போது தனக்கு முதல்வர் பதவி கொடுத்தால் தான் ஆதரவு தெரிவிப்பேன் எனக் கூட ஷிண்டே சொல்லலாம்! இதனால் அங்குள்ள கூட்டணி ஆட்சியே இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications