பைலட்டுகள் செய்த தவறு தான் காரணம்? அஜித்பவார் விமான விபத்து பற்றி திடுக்கிட வைக்கும் தகவல்
மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் நேற்று மரணமடைந்தார். இந்த விமான விபத்துக்கு பைலட்டுகளின் தவறான கணிப்பு காரணமாக இருக்கலாம் என்று திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் பின்வருமாறு:

மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத கட்சியின் தலைவருமான அஜித் பவார் நேற்று விமான விபத்தில் பலியானார். அஜித் பவார் பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார். பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்தில் சிக்கியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், அவரது பாதுகாவலர் விதிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, பைலட்டுகளான சுமித் கபூர், துணை லைட் ஷாம்பவி பதாக் ஆகியோர் பலியாகினர். இந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது.
தீவிரமான விசாரணை
இந்த விமான விபத்து பற்றி, விமான விபத்து விசாரணைப் பணியகத்தை (AAIB) சேர்ந்த மூன்று அதிகாரிகளும், டிஜிசிஏ எனும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மும்பை மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் விபத்து நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
2வது முயற்சியில் தரையிறங்க..
இந்நிலையில் தான் அஜித் பவாரின் விமானம் விபத்தில் சிக்குவதற்கு பைலட்டுகளின் தவறான முடிவு கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது விமானம் தரையிறங்கும்போது விசிபிலிட்டி சரியாக இல்லை.
இதனால் விமானம் முதல் முயற்சியில் தரையிறங்காமல் மீண்டும் வானில் பறந்தது. அதன்பிறகு 2வது முயற்சியில் தரையிறங்கியபோது தான் விபத்தில் சிக்கியது. விமானிகளால் தரையிறங்கும் ஓடுதளத்தை பார்க்க முடியாத அளவுக்கு பனிபொழுவு இருந்ததால் விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
விமானிகள் தான் காரணமா?
இந்நிலையில் தான் தற்போது முதற்கட்ட விசாரணையின் தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமான விபத்துக்கு, மோசமான வானிலையில் விமானி தவறாக முடிவெடுத்ததே காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டுகிறது. விமானம் இரண்டாவது முயற்சியில் தரையிறங்க முயன்றபோதும் விமானத்தில் இருந்து ஓடுதளத்தை பார்ப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லை.
இதனால் விமானத்தை விமானிகள் புனேவில் தரையிறங்க முடிவெடுத்து இருக்கலாம். ஆனால் விமானிகள் பாராமதியிலேயே தரையிறங்க முடிவெடுத்து அதனை செயல்படுத்த முயன்றதால் விபத்து நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.
விஐபி பயணத்தில் நேரம் முக்கியம்
மேலும் விஐபிக்கள் பயணிக்கும் விமானத்தை குறிப்பிட்ட நேரத்தில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அஜித் பவாரும் விஐபி தான். ஆனால் ஓடுபாதை சரியாகத் தெரியாத நிலையில் தரையிறக்காமல் மாற்று இடத்தை தேர்வு செய்து இருக்கலாம். ஆனால் விமானிகள் அதனை செய்யவில்லை என்பது முதற்கட்ட விசரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications