கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! "இரு இன்டக்ஷன் ஸ்டவ்களை ஆர்டர் செய்த மனைவி" நடிகர் அக்ஷய் குமார் கலகல
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நடிகர் அக்ஷய் குமார், "எனது மனைவி ட்விங்கிள் கன்னா இரு இன்டக்ஷன் ஸ்டவ்களை ஆன்லைனில் வாங்கியிருக்கிறார்" தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட பாதிப்பால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் சிலிண்டர் கேட்டு கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மும்பையில் பல வீடுகளும் உணவகங்களும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றன. மேற்கு ஆசிய மோதல்கள் இந்தியாவுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளன. நாட்டின் 60% தேவைகள் இறக்குமதியாகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வரும் விநியோகங்கள், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல்களால் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி (BMC) தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், தனது மனைவியும், எழுத்தாளரான ட்விங்கிள் கன்னா ஏற்கெனவே இரு இன்டக்ஷன் அடுப்புகளை வாங்கியுள்ளதாகக் கூறினார். அக்ஷய் குமார், மும்பை பாஜக தலைவர் அமித் சாதம் உடன் "மும்பை தூய்மை லீக்" அறிமுக நிகழ்வுக்கு வந்திருந்தார்.
அப்போது சமையல் எரிவாயு பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு அக்ஷய் பதிலளித்தார்: "எனக்கு இதுவரை பிரச்சனை இல்லை. ஆனால் என் மனைவி இரு நாட்களுக்கு முன் இரு இன்டக்ஷன் அடுப்புகளை வாங்கியுள்ளார். நீங்களும் வாங்கிக் கொள்ளலாம்."
அவர் ஆர்டர் செய்தது தெரியும், ஆனால் வீட்டிற்கு டெலிவரி வந்ததா என்பது தெரியவில்லை" என அக்ஷய் குறிப்பிட்டார். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இன்டக்ஷன் ஸ்டவ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் குமார், ட்விங்கிள் கன்னா ஆகியோர் ஜனவரி 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரவ், நிதாரா என இரு குழந்தைகள் உள்ளனர். நடிகையிலிருந்து எழுத்தாளரான ட்விங்கிள், 2015 இல் "Mrs Funnybones" உட்பட "The Legend of Lakshmi Prasad", "Pyjamas Are Forgiving", "Welcome to Paradise" போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
அக்ஷய் குமார் பிரியதர்ஷன் இயக்கத்தில் "பூத் பங்களா" படத்தில் நடிக்கிறார். இதில் தபு, பரேஷ் ராவல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் உள்ளனர். ஷோபா கபூர், ஏக்தா கபூரின் பாலாஜி டெலிஃபில்ம்ஸ் மற்றும் அக்ஷய் குமாரின் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. வாமிகா காபி இதில் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"வெல்கம் டு தி ஜங்கிள்", "ஹேரா ஃபேரி 3" படங்களும் அக்ஷய்யின் வரிசையில் உள்ளன. பிரியதர்ஷன் இயக்கத்தில் சைப் அலி கான், சயாமி கெர் நடிக்கும் "ஹைவான்" படத்தையும் அவர் கொண்டுள்ளார். இதை கே.வி.என் புரொடக்ஷன்ஸ், தஸ்பியன் பிலிம்ஸ், வெங்கட் கே. நாராயணா, ஷைலஜா தேசாய் ஃபென் ஆகியோர் தயாரித்து, 2026 இல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications