மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் திடீரென பல்டி அடித்த மராத்தா போராட்ட குழு- வேட்பாளர்கள் கூண்டோடு வாபஸ்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தா இடஒதுக்கீடு கோரி போராடும் போராட்டக் குழு போட்டியிடாது என அதன் தலைவர் மனோஜ் ஜரங்கே திடீரென அறிவித்தார். அத்துடன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றதாகவும் மனோஜ் ஜரங்கே அறிவித்திருக்கிறார். இந்த தேர்தலில் மராத்தா ஜாதி மக்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் யாருக்கும் வாக்களிக்கலாம் எனவும் மனோஜ் ஜரங்கே அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு விவகாரம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மராத்தா ஜாதியினருக்கு தனி இடஒதுக்கீடு, உள் இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யபட்டுவிட்டன. இதனையடுத்து மராத்தா ஜாதியினர் தொடர்ந்து இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மராத்தா ஜாதியினரின் பிரதிநிதியாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார். மேலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தா இடஒதுக்கீடு கோரும் போராட்டக் குழு வேட்பாளர்களை களமிறக்கும் என அறிவித்திருந்தார். இதனடிப்படையில் பல தொகுதிகளில் இந்த குழுவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளான நேற்று திடீரென தங்களது போராட்டக் குழு தேர்தலில் போட்டியிடாது என மனோஜ் ஜரங்கே அறிவித்தார். அத்துடன் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றதாகவும் மனோஜ் ஜரங்கே அறிவித்திருக்கிறார்.
இந்த தேர்தலில் மராத்தா போராட்டக் குழு, எந்த ஒரு கூட்டணியையும் ஆதரிக்கவில்லை; மராத்தா ஜாதி மக்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் எனவும் மனோஜ் ஜரங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். மராத்தா ஜாதி இடஒதுக்கீடு போராட்டத்தை காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி முழுவீச்சில் ஆதரித்து வரும் நிலையில் மனோஜ் ஜரங்கேவின் இந்த அறிவிப்பு அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications