அமேசான் பிரைம் வீடியோவில் இனி பிற மொழி ஷோக்களை தமிழ் சப்-டைட்டிலுடன் பார்க்கலாம்
மும்பை: அமேசான் பிரைம் வீடியோ, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும், தனது சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளிலும் தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ஹிந்தியில் தனது சேவைகளை வழங்க ஆரம்பித்த அமேசான் பிரைம் வீடியோ, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் அவற்றை வழங்குகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி மற்றும் வங்க மொழிகளில் தற்போது இதன் சேவைகள் கிடைக்கின்றன. எந்த ஒரு மொழியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், அவற்றுக்கு இனி தமிழில் சப்-டைட்டில் கிடைக்கும். இதன் மூலம், உள் மாநில மொழிகளுடன் நெருக்கமான தொடர்பை அமேசான் பராமரிக்கும்.
செட்டிங் ஆப்ஷனில் சென்று தங்களுக்கான மொழித்தேர்வை நேயர்கள் தேர்வு செய்துகொள்ள முடியும். செல்போன் ஆப் மற்றும் டெஸ்க்டாப்பிலும் இதை செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications