மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முதுகில் குத்தியவர்கள்.." இன்று முக்கிய நடவடிக்கை எடுக்கும் சிவசேனா.. அதிரடி மோடில் தாக்கரே!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள சூழலில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

Recommended Video

    Shiv Sena முக்கிய நடவடிக்கை எடுக்கும்: Uddhav Thackeray அதிரடி | *Politics

    மகாராஷ்டிராவில் ஷிண்டேவுக்கு ஆரவாக சுமார் 40 எம்எல்ஏக்கள் இப்போது அசாமின் கவுஹாத்தில் தங்கி உள்ளனர். அதாவது சொந்த கட்சியினராலேயே மைனாரட்டி அரசாக தாக்கரே அரசு மாறி உள்ளது.

    2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி 2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி

    என்சிபி-காங்கிரஸ் கூட்டணியை சிவசேனா முறித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் தாக்கரே அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற சூழலே உருவாகி உள்ளது.

     சிவசேனா

    சிவசேனா

    இதனிடைய இன்று சிவசேனாவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சிவசேனா பவனில் நடைபெறுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே காணொலி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். முன்னதாக நேற்று தான் தாக்கரே மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார், அதில் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் "கட்சியை உடைக்க" விரும்புவதாக்கச் சாடி இருந்தார்.

     சித்தாந்தம்

    சித்தாந்தம்

    சேனா ஒரு போதும் அழிக்கப்படாது என்று குறிப்பிட்ட தாக்கரே கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்கள் தாராளமாக செல்லலாம் என்றும் தான் புதிய சிவசேனாவை உருவாக்குவேன் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "சிவசேனாவை முடிவுக்குக் கொண்டுவர பாஜக முயல்கிறது. சிவசேனா என்பது ஒரு சித்தாந்தம்... இந்து வாக்கு வங்கியை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாததால் நம்மை அழிக்க பாஜக விரும்புகிறது" என்று அவர் தெரிவித்தார்.

     முதுகில் குத்தினார்

    முதுகில் குத்தினார்

    சிவசேனா இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதாக ஷிண்டே குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி கொடுத்துள்ள பதிலடியில், "குடும்பத்தைப் போல் இருக்கும் கட்சியை முதுகில் குத்துவதற்கு எந்த இந்துத்துவா உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது?" என்று கேட்டுள்ளார்.

     அடுத்தகட்ட நடவடிக்கை

    அடுத்தகட்ட நடவடிக்கை

    ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக முதலில் அசாம் சென்ற 16 எம்எல்ஏக்களுக்கு இன்று கட்சி நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடங்க ஏற்கனவே மகாராஷ்டிர சட்டசபை துணைச் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இன்று அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     வழக்கறிஞர்

    வழக்கறிஞர்

    ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கும் சிவசேனா தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து சிவசேனா சட்டப் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் தரம் மிஸ்ரா கூறுகையில், "சிவசேனா ஒரு பதிவு செய்யப்பட்ட பிராந்தியக் கட்சியாகும், உத்தவ் தாக்கரே எங்கள் தலைவர். எங்களிடம் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஒரு அரசியலமைப்பு உள்ளது. அதையெல்லாம் பின்பற்றாமல் ரியல் சிவசேனா என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை" என்றார்.

    English summary
    Maharashtra Chief Minister Uddhav Thackeray has called a national executive meeting today: (மகாராஷ்டிராவில் நிலவும் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்) Maharashtra political crisis latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X